தனுஷ் அதை செய்வார்னு நான் எதிர்பார்க்கவே இல்ல!.. நெகிழும் வில்லன் நடிகர்…

Published on: June 20, 2024
dhanush
---Advertisement---

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் வில்லன் நடிகராகவும், அடியாட்களில் ஒருவராகவும் கலக்கியவர்தான் பொன்னம்பலம். 80களிலேயே சினிமா நுழைந்த இவர் 90களில் ரசிகர்களிடம் பிரபலமானார். விஜயகாந்த், சரத்குமார், சத்தியராஜ், ரஜினி, கமல் என அப்போதைய முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக விஜயகாந்த் மற்றும் சரத்குமார் படங்கள் என்றாலே கண்டிப்பாக பொன்னம்பலம் இருப்பார். விஜயகாந்துடன் பல படங்களில் ஒன் டூ ஒன் ஃபைட் காட்சிகளில் நடித்திருக்கிறார். நாட்டாமை உள்ளிட்ட சில படங்களில் மெயின் வில்லனாகவும் கலக்கி இருக்கிறார் அந்த படத்தில் இவர் பேசிய ‘தாய் கிழவி’ என்கிற வசனம் மிகவும் பிரபலம்.

ponnambalam

பல படங்களில் டெரர் வில்லனாக அசத்தி இருக்கிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். ஒரு படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார். ரஜினியுடன் முத்து உள்ளிட்ட சில படங்களிலும் கமலுடன் மைக்கேல் மதன காமராஜன், சத்யா, வெற்றி விழா, அபூர்வ சகோதரர்கள் என பல படங்களிலும் நடித்திருக்கிறார்.

சமீபகாலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். படுக்கையில் இவர் உயிருக்கு போராடும் புகைப்படங்களும் வெளியானது. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய பொன்னம்பலம் ‘நான் சிகிச்சைக்கு பணமில்லாமல் அவதிப்பட்டபோது நான் எதிர்பார்க்காத நடிகர்கள் எல்லாம் உதவி செய்தனர். என் மருத்துவ செலவை சரத்குமார் பார்த்துகொண்டார். வீட்டு செலவை தனுஷ் பார்த்துகொண்டார்’.

வீட்டு வாடகையே 30 ஆயிரம் ரூபாய். மூன்றரை வருடம் அவர்தான் வாடகை கொடுத்து வீட்டு செலவுக்கும் பணம் கொடுத்தார். தனுஷுடன் 4 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன். அவருக்கு என் மேல் இவ்வளவு பாசம் இருக்கும் என நாம் எதிர்பார்க்கவில்லை. அவரின் அப்பாவின் சில படங்களில் நடித்திருக்கிறேன். அப்போது அவரின் வீட்டுக்கும் போயிருக்கிறேன். அப்போதெல்லாம் தனுஷ் சின்ன பையனாக இருப்பார்.

மிகவும் யோசித்துதான் அவரிடம் உதவி கேட்டேன். போனில் அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே என் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பிவிட்டார். ‘நீ நல்லா இருப்படா’ என சொல்லிவிட்டு போனை வைத்தேன். நான் எதிர்பார்த்த பல நடிகர்கள் எனக்கு உதவவில்லை. ஆனால், தனுஷ் உதவினார்’ என நெகிழ்ந்து பேசினார் பொன்னம்பலம்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.