
Cinema News
இமேஜைத் தேடி போற ஆளு கேப்டன் அல்ல… அப்படி போயிருந்தா இப்படி எல்லாம் செய்வாரா..?
Published on
சினிமா தொழிலாளர்களின் பிரச்சனை கொளுந்து விட்டு எரிந்தது. அதைப் பேசித் தீர்;ப்பதற்காக விஜயகாந்துக்கு பாலசந்தர் அழைப்பு விடுத்தாராம். அங்கு ஏற்கனவே கமல், ரஜினி, சத்யராஜ் ஆகியோரும் இருந்தனர். பாலசந்தரே அழைத்துவிட்டாரே என விஜயகாந்த் அவசரம் அவசரமாக லுங்கியைக் கூட மாற்றாமல் வந்து விட்டாராம்.
1979ல் ‘இனிக்கும் இளமை’ படத்தில் தான் ஹீரோவாக அறிமுகமானார் விஜயகாந்த். தொடர்ந்து வெற்றிப்படங்களைத் தந்து முன்னணி நடிகர் ஆனார். அதன்பிறகு தான் நடிக்கும் படங்களின் போது யூனிட்டில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவைத் தரச் செய்தார். இது அவருக்கு திரை உலகில் தனி அந்தஸ்தை ஏற்படுத்தியது.
வெளிநாட்டில் கலைநிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் நீண்டகாலமாக தீரக்க முடியாமல் இருந்த நடிகர் சங்கத்தின் கடன் பிரச்சனையைத் தீர்த்து வைத்தார். அது மட்டுமல்லாமல் விஜயகாந்தை யார் பார்க்க வந்தாலும் அவருக்கு வயிறாற சாப்பாடு கொடுத்துத் தான் அனுப்புவார். அவரது அலுவலகத்தில் எப்போதும் உணவு தயாராக இருக்குமாம்.
சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பவர் விஜயகாந்த் தான். சக நடிகர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் ஓடிச் சென்று உதவுவார். பெப்சி தொழிலாளர்களுக்கும், படப்பிடிப்பு குழுவினருக்கும் கடும் மோதல் நடந்தது. அதனால் சில வாரங்கள் படப்பிடிப்பே நடக்காமல் ஸ்தம்பித்துப் போனது.
அப்போது இயக்குனர் பாலசந்தர் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி முன்னணி நடிகர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்துவது தான் என்று முடிவு எடுத்தார். அதற்காக கமல், ரஜினி, சத்யராஜ், விஜயகாந்த் போன்றவர்களை சமாதான பேச்சுவார்த்தைக்காக அழைத்தார்.
அப்போது விஜயகாந்தை அழைக்கும்போது அவர் அவசரம் அவசரமாக லுங்கியுடன் கிளம்பி வந்த போட்டோ இப்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கேப்டன் என்றால் சும்மாவா? இமேஜ் அவருக்கு ஒரு பொருட்டல்ல. அது தானா அவரைத் தேடி வரும்.
சர்ச்சை நாயகன் பாலா : kpy பாலா மீது பல சர்ச்சைகள் அவரை சுற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பாலா...
Ajith Vijay: தமிழ் சினிமாவில் எப்படி எம்ஜிஆர் – சிவாஜிக்கு பிறகு ரஜினியும் கமலும் பல சாதனைகள், வெற்றிகளை குவித்து வந்தார்களோ...
சிம்புவுடன் இணைந்த வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் முக்கிய, அதே சமயம் சிறந்த இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இத்தனைக்கும்...
வடிவேலுவின் கோபம் : தற்போது சமூக வலைதளங்களில் வைகைப்புயல் வடிவேலுதான் பேசும் பொருளாக மாறி உள்ளார். அதற்கு காரணம் சமீபத்தில் அவர்...
தனுஷை வைத்து பல படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில்...