Connect with us

Cinema News

இதுக்கு மேல எங்க கிட்ட ஒண்ணுமில்லை!.. தயவு செஞ்சு படத்தை பாருங்க!.. கல்கி 2வது டிரெய்லர் எப்படி?..

ஹாலிவுட்டில் வெளியான வேற்று கிரக படங்களையும் இந்திய புராணத்தை மிக்ஸ் செய்து இப்படி ஒரு பிரம்மாண்ட படமாக கல்கி படத்தை தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் உருவாக்கி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். பாகுபலி படத்திற்கு பிறகு பிரம்மாண்ட போர் காட்சிகளுடன் உருவாகியுள்ள பிரபாஸ் படமாக கல்கி திரைப்படம் இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.

பிரபாஸ் மற்றும் அமிதாப்பச்சனுக்கு தான் இந்தப் படத்தில் அதிக முக்கியத்துவம் இருக்கிறது என்பது இரண்டாவது டிரைலரில் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டிருக்கிறது. மேலும், படத்தின் மொத்த கதையையும் டிரைலர் மூலமே ரிவீல் செய்து விட்டனர்.

இதையும் படிங்க: டபுள் ஆக்‌ஷனில் தெறிக்கவிட்ட விஜய்!.. இந்த வருஷத்தோட வெயிட்டான சம்பவமாக மாறும் கோட்!.. செம சீன்!..

வரும் ஜூன் 27-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக கல்கி 2898 ஏடி திரைப்படம் வெளியாகிறது. 3டி தொழில்நுட்பத்திலும் இந்த படம் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், நேற்று வெளியான டிரைலரில் கமல்ஹாசன் லுக் ரொம்பவே விசித்ரமாக உள்ளது. மெயின் வில்லனே அவர் தான் எனக் கூறுகின்றனர்.

ஸ்டார் வார்ஸ் மற்றும் டூன் படங்களில் பார்த்ததை போன்ற காட்சிகளுடன் மகாபாரதம் மற்றும் கல்கி அவதார கதையை கலந்துக் கட்டி இப்படியொரு படத்தை நாக் அஸ்வின் உருவாக்கி உள்ளார்.

இதையும் படிங்க: விஜயால் அந்த ஒரு பெருமைக்கு ஆளான சூப்பர் குட் பிலிம்ஸ்! எல்லாம் அந்த பாடல் செய்த மேஜிக்

கண்டிப்பாக இது இன்னொரு இதிகாசமாக மாறப் போகிறது என்கின்றனர். ஆனால், கரணம் தப்பினால் மரணம் என்பது போல ஆதிபுருஷ் படத்தில் நடந்த அதே நவீன மயமாக்குதல் வேலைகளை புராண கதைகளில் செய்திருப்பது எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

தீபிகா படுகோன் வயிற்றில் வளரும் குழந்தையை காப்பாற்ற அஸ்வத்தாமாவாக அமிதாப் பச்சன் வருகிறார். காசுக்காக அந்த பெண்ணை வில்லனிடம் கொண்டு சேர்க்க வரும் பிரபாஸ் எப்படி ஹீரோவாக மாறுகிறார் என்பது தான் இந்த கல்கி படத்தின் கதையாக இருக்கும் என்பதை டிரைலர் தெளிவாக கூறிவிட்டது.

இதையும் படிங்க: இது அது இல்ல!.. கோட் படத்தோட செகண்ட் சிங்கிள் சூர்யா படத்தோட காப்பியா?.. முடிச்சிவிட்ட ஃபேன்ஸ்!..

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க..

https://x.com/VyjayanthiFilms/status/1804213008521990270

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top