Connect with us
rajini

Cinema History

காலையில போய் பார்த்தா அழுதுக்கிட்டு இருப்பாரு!.. ரஜினி பற்றி ஷாக்கிங் தகவல் சொன்ன இயக்குனர்…

பாலச்சந்தர் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ரஜினிகாந்த். பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை பார்த்துவிட்டு நடிக்கும் ஆசையில் சென்னை வந்தவர். சென்னையில் நடிப்பு கல்லூரியில் படித்துவிட்டு பாலச்சந்தர் அறிமுகம் கிடைத்து அவர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார்.

அதன்பின் மூன்று முடிச்சி, பதினாறு வயதினிலே, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். கமலுடன் இணைந்து பல படங்களிலும் நடித்தார். ஒருகட்டத்தில், தனி ஹீரோவாக நடிக்க துவங்கினார். பைரவி படத்தில்தான் முதன் முதலாக ஹீரோவாக நடித்தார். ஒரு கட்டத்தில் சூப்பர்ஸ்டாராகவும் மாறினார்.

இதையும் படிங்க: ரஜினிக்கு அடுத்தவன் பொண்டாட்டிதான் செட் ஆகும்! யாருக்கும் பாரபட்சம் கிடையாது.. பொளந்து கட்டிய மன்சூர்

இப்போதும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் 700 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்ததன் மூலம் விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு டஃப் கொடுத்தார் ரஜினி. இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவிருக்கிறார்.

ரஜினிக்கு ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் உண்டு. வீட்டில் தினமும் தியானம் பண்ணும் பழக்கம் உண்டு. பல வருடங்களாகவே இதை ரஜினி கடை பிடித்து வருகிறார். நடிக்க வந்து 10 வருடங்களில் அவருக்கு ஆன்மிகத்தில் அளவு கடந்த ஆர்வம் ஏற்பட்டது. ராகவேந்திரா சாமியை தனது குருவாக நினைத்தார்.

இதையும் படிங்க: பாலசந்தர் போன்ல பேசுனாருன்னா ரஜினியோட ரியாக்ஷன் எப்படி இருக்கும் தெரியுமா?

ஸ்ரீதர் இயக்கத்தில் ரஜினி, கமல் நடித்து 1978ம் வருடம் வெளியான படம் இளமை ஊஞ்சலாடுகிறது. இந்த படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்தவர் சந்தானபாரதி. பின்னாளில் கமலுக்கு நெருக்கமாகி குணா, மகாநதி ஆகிய படங்களை இயக்கியவர். பல திரைப்படங்களில் காமெடி காட்சிகளில் நடித்தும் இருக்கிறார்.

santhana

santhana

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘அந்த படத்தின் ஷூட்டிங் நடந்தபோது ரஜினியுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் யாருடனும் பேசமாட்டார். அமைதியாக அமர்ந்திருப்பார். தினமும் காலை அவரின் வீட்டுக்கு சென்று அவரை பிக் அப் பண்ணுவேன். அப்படி போகும்போது ஆழ்ந்து தியானம் செய்து கொண்டிருப்பார். அப்போது அவரின் கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்கும். என்னை பார்த்ததும் புறப்பட்டு என்னுடன் வருவார்’ என சொன்னார் சந்தானபாரதி.

google news
Continue Reading

More in Cinema History

To Top