Cinema History
விஜய் அப்படி நடிச்சதே மோசமான விஷயம்!… படம் ஒரு ஆணியும் புடுங்கப்போறது இல்ல… விளாசும் பிரபலம்
தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அவரது பிறந்தநாளை ஒட்டி வெளியாகி உள்ளது. ஒரே இரவிற்குள் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் நடிக்க மாட்டார். முழு நேர அரசியலில் இறங்கி விடுவார் என்றும் சொல்கிறார்கள். ஒரு சிலர் இன்னொரு படம் மட்டும் நடிப்பார் என்கிறார்கள்.
இந்தப் படத்தில் 2 விஜய் இருக்கிறார். ரெண்டு பேரும் என்ன செய்யப் போறாங்கன்னு பலரும் வலைதளங்களில் கேட்கிறாங்க. இந்தப் படம் வெங்கட்பிரபு, யுவன், விஜய் கூட்டணியில் வருகிறது. அந்த வகையில் கிளிம்ப்ஸ் வீடியோவும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
விஜய் அரசியலில் இறங்கி விட்டார். அதனால் இந்தப் படத்தில் நல்ல கருத்தை சொல்லப் போகிறாரா என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இது படம் வந்தால் தான் தெரியும். இருந்தாலும் ‘பார்ட்டி ஒண்ணு தொடங்கட்டுமா’ பாடல் சில யூகங்களைக் கிளப்பியுள்ளது. இதைப் பாடியவர் விஜய் தான்.
இந்தப் படம் பெரிய அளவில் எதுவும் சொல்லாது. மக்களுக்கு எதிரான கருத்தைத் தான் வைக்கும் என்று தெரிகிறது. இவர் சொல்ற பார்ட்டின்னா பார். மது குடிக்கும் இடம். குடிமக்கள் தான் நம்ம கூட்டணின்னு வேற சொல்றாரு. இது இந்தியக் குடிமக்கள் கிடையாது. இந்தியாவில் இருக்கக்கூடிய குடி(காரர்கள்)மக்கள்.
இந்தப் பாட்டைக் கவனிச்சா மக்களுக்காக பெரிய அளவுல ஒரு ஆணியும் புடுங்கப்போறது இல்ல. அவரோட வருமானத்துக்காக இந்தப் படத்தைப் பண்றாரு. கிளிம்ப்ஸப் பொருத்தவரைக்கும் இது பைக் சேஸிங். விஎப்எக்ஸ் காட்சிகளை ரொம்ப அருமையா எடுத்துருக்காங்க. அதனால தான் 2 விஜயையும் பைக்ல வர்ற மாதிரி தத்ரூபமா எடுத்துருக்காங்க.
விஜய் குடிகாரர்களுக்காக இப்படி ஒரு பாட்டு பண்ணியதே மோசமான செயல்னு தான் நான் சொல்வேன். படம் ஓடணும்கறதுக்காக நான் எல்லாத்தையும் பண்ணுவேன்னு நடிச்சா இது முழுக்க முழுக்க சுயநலம் சார்ந்தது.
இதுக்கு முன்னாடி ‘லியோ’ன்னு ஒரு படம். கஞ்சா, அபின், சரக்கு கைமாத்துறதைக் காட்டின படம். இதுக்கு முன்னாடி கண்ணதாசனை சொல்வாங்க. ஒரு பாட்டைத் தவறா எழுதுனதா மக்கள் சொன்னதால 6 மாசம் பேனாவையே எடுக்கலையாம்.
அதே நேரத்துல முழுக்க முழுக்க குடி, கஞ்சான்னு காட்டுற படத்துல நடிக்கிற விஜய் இவ்வளவையும் எடுத்துக்கிட்டு கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் மக்களைப் போய் சந்திச்சிருக்காரு. கள்ளக்குறிச்சில விஷ சாராயம் குடிச்சி பலியான குடும்பத்தாரையும் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்காரு.
இவர் மக்களுக்கு என்ன செய்யப்போறாருன்னு தெரியல என்கிறார் பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி.