Cinema History
தசாவதாரத்தையும் தூக்கிச் சாப்பிட்டு விடுமா இந்தியன் 2? ரஜினிக்கு உள்குத்தா?
இந்தியன் 2 படத்துக்கான டிரெய்லர் பார்த்து விட்டு ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அந்த வகையில் பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி சில கருத்துகளை முன்வைத்துள்ளார். இந்தியன் 2 பட டிரெய்லரைப் பார்க்கும்போது இயக்குனர் ஷங்கர் ஊழலுக்கு எதிராகத் தான் பேசுறாருங்கறது தெரியுது.
30 வருஷங்களுக்குப் பிறகு இந்தியாவுல எத்தனையோ விஷயங்கள் மாறிடுச்சு. பல அரசியல் சூழல்களும் மாறி கன்னா பின்னான்னு போய்க்கிட்டு இருக்கு. ஆனா அதையும் தாண்டி உலகமே மாறினாலும் நான் மாற மாட்டேன். ஊழலுக்கு எதிராகத் தான் பேசுவேன்னு சொல்லி பேசிருக்காரு.
இதையும் படிங்க… தேவர் மகன் கதையை இப்படித்தான் எழுதினேன்!.. கமல் சொன்ன பதிலை பாருங்க!..
ஒருவேளை இந்தப் படத்துல ஊழலைப் பத்தி மட்டும் தான் பேசுவாரா என்ற கேள்வி எழுகிறது. ஒரு வேளை இது தசாவதாரம் 2 படமா என்ற கேள்வியும் வருகிறது.
என்னன்னா பலவகையான கெட்டப்புகள்ல கமல்ஹாசன் வர்றாரு. தசாவதாரம் படத்துல 10 கெட்டப்புல வந்தாரு. ஒருவேளை இதுல 12 கெட்டப்புல வரப்போறாராங்கற சந்தேகமும் வருது.
ஊழல் அரசியல்வாதிகளுக்கு நன்றின்னு கமல் சொல்றாரு. அவங்க தான் இந்தப் படம் எடுக்க காரணமா இருந்தார்களாம். இன்னும் சொல்லப்போனா இந்த உலகம் இருக்குற வரைக்கும் ஊழல் இருக்கும். ஆனா ஷங்கர் தான் இன்னும் மாறல. சிஸ்டம் சரியில்லன்னு ஒருத்தர் சொல்றாரு.
ஏற்கனவே ரஜினி அரசியல்ல சிஸ்டம் சரியில்லன்னு முன்பு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால இந்த வசனம் ஷங்கரோட ரஜினிக்கான உள்குத்தா இருக்குமோ என்றும் தெரியல. அது படத்துல முழுசா பார்க்குறப்ப தான் தெரியும்.
30 வருஷத்துக்கு முன்னாடி இந்தியன் தாத்தாவுக்கு 80 முதல் 90 வயசுக்குள் இருக்கும். இப்ப வந்தாருன்னா தாத்தா நடக்க முடியுமா? பறக்க முடியுமா? அதிலும் இந்தியன் தாத்தா இந்தியா முழுவதும் போராடுறாரு. இது ஒரு பான் இண்டியா மூவிங்கறதால படத்துல எல்லா விஷயமும் வைத்து பிரம்மாண்டமா எடுத்துருக்காங்க. ஆனா படத்தோட மையக்கரு தான் என்னன்னு தெரியல.
இதையும் படிங்க… விஜயகாந்திடம் சொல்லப்பட்ட விஜய் பட கதை… என்ன நடந்ததுன்னு தெரியுமா?
இந்தப் படத்துல ‘ஆண்டி இண்டியன்’னு ஒரு வார்த்தை வருது. அது பாஜக அடிக்கடி பயன்படுத்துற வார்த்தை. அதனால ஊழலைத் தாண்டி வேறு பக்கமும் ஷங்கர் கதையை எடுத்துச் சென்றுள்ளாரா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படம் வரட்டும் பார்ப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.