Cinema History
விஜயகாந்தை பெல்ட்டால் அடித்தேன்!… பல வருடங்கள் கழித்து சொன்ன அந்த நடிகர்!…
தமிழ்சினிமாவின் கேப்டன் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டவர் நடிகர் விஜயகாந்த். இவர் மறைந்தாலும் இவரது புகழ் என்றென்றும் மறைவதில்லை. அதற்குக் காரணம் இவரது உதவி செய்யும் மனப்பான்மை தான்.
யாருக்கு எந்த உதவி என்றாலும் முதல் ஆளாக ஓடிச் சென்று உதவுபவர் இவர் தான். எம்ஜிஆரைப் போன்ற குணம் கொண்டவர் என்பதால் இவரை ‘கருப்பு எம்ஜிஆர்’ என்றே அழைத்தனர்.
நடிகர் விஜயகாந்தின் பெருந்தன்மை பற்றி நடிகர் ராதாரவி தெரிவித்துள்ள தகவல் ஆச்சரியமாக இருக்கிறது. விஜயகாந்த் அப்பவே இவ்வளவு விஷயங்களை பண்ணியிருக்காரா என்று நினைக்கத் தோன்றுகிறது. வாங்க ராதாரவி என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.
எனக்கு ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தைப் பற்றிச் சொல்லும்போது நாளை இந்த வேளைன்னு பாடுனாரு டைரக்டர் ஆர்.சுந்தரராஜன். ‘சார் இது உயர்ந்த மனிதன் பாட்டுலா’ன்னு கேட்டேன். ‘யோவ் தெரியும்யா அந்த மாதிரி பாட்டு’ன்னாரு.
அதுல எனக்கு ரொம்ப பிடிச்சது. விஜயகாந்த் ஒரு பெரிய ஹீரோ. ஃபைட்டிங் ஹீரோ. அவரை பெல்ட்டால அடிக்கணும். ஆனா ஒரு அடி கூட திருப்பி அடிக்க மாட்டாரு. ஏன்னா கதை கெட்டுப் போயிடும்ல. அடுத்த சீன்ல சொல்வாரு. நான் அடிச்சிருப்பேன்னு டயலாக் பேசுவாரு. என்ன இருந்தாலும் அப்ப அடிக்கலங்கறது தான.
அதே மாதிரி சுந்தரராஜன் டைரக்ஷன்ல அம்மன்கோவில் கிழக்காலே. அந்தப் படத்துலயும் எங்கிட்ட அடி வாங்குவாரு. அதை ஒத்துக்கிட்டு செய்வாரு பாருங்க. அது தான் விஜயகாந்த். வேறு எந்த ஹீரோவும் செய்ய மாட்டாரு. அதனால தான் எனக்கு அந்தப் படங்கள்லாம் மறக்கல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் வைதேகி காத்திருந்தாள் படத்தில் வெள்ளைச்சாமியாகவே வாழ்ந்திருப்பார் விஜயகாந்த். அந்தக் கேரக்டரில் ஒரு முன்னணி ஹீரோ நடிக்க ரொம்பவே தயங்குவார். ஆனாலும் அசால்டாக நடித்து இருப்பார் கேப்டன்.