கமலா இல்ல பயில்வான் ரெங்கநாதனானு தெரியல! இந்தியன் தாத்தாவை வச்சு செய்த பிரபலம்

Published on: June 27, 2024
renga1
---Advertisement---

Indian Kamal: கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் திரைப்படம் இந்தியன் 2. அனிருத் இசையில் லைக்கா தயாரிப்பில் படம் பெரிய அளவில் உருவாகி இருக்கிறது. படத்தின் டிரைலர் சமீபத்தில் தான் வெளியானது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பெரிய எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு ட்ரைலரிலேயே படம் எப்பேர்ப்பட்டது என்பதை காட்டி இருக்கிறார் சங்கர். அது மட்டுமில்லாமல் இசை வெளியீட்டு விழாவும் சமீபத்தில் தான் சென்னையில் நடைபெற்றது. திரையுலகை சார்ந்த பல பிரபலங்கள் அந்த விழாவில் கலந்துகொண்டு இந்தியன் 2 படம் வெற்றி அடைய வேண்டும் என மனதார வாழ்த்தினார்கள்.

இதையும் படிங்க: கல்கி படத்துல அதென்ன 2898? என்ன தான் சொல்ல வர்றாங்க? பிரபலம் தகவல்

இந்த நிலையில் ஒட்டுமொத்த பட குழுவும் பிரமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. இந்தியன் 2 படத்தைப் பொறுத்த வரைக்கும் கமல் மொத்தம் 12 கெட்டப்பில் வருகிறாராம். அதில் இந்தியன் 2 வில் ஏழு கெட்டப்பிலும் இந்தியன் 3 இல் ஐந்து கெட்டப்பிலும் வருகிறாராம் .இதன் முதல் பாகமான இந்தியன் படம் 1997 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது .

அதன் தொடர்ச்சி தான் இதன் இரண்டாம் பாகம். இதில் ஒரு கெட்டப்பில் கமல் முறுக்கு மீசையுடன் வயதான தோற்றத்தில் வருவார். அந்த கெட்டப்பை பிரபல அரசியல் பிரமுகர் சாட்டை துரைமுருகன் கிண்டல் செய்துள்ள செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

renga
renga

இதையும் படிங்க: தெறி மாஸ் லுக்கில் அஜித்குமார்!.. வெளியான குட் பேட் அக்லி செகண்ட் லுக் போஸ்டர்!…

அதாவது இந்தியன் 2 படத்தின் டிரைலரை பார்க்கும்போது அதில் நடித்துள்ளது கமலா என்றே தெரியவில்லை. ஒரு பக்கம் பார்க்கும் போது பயில்வான் ரங்கநாதன் போல் இருக்கிறார். இன்னொரு பக்கம் பார்க்கும் பொழுது நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் மாதிரி இருக்கிறார் என கிண்டல் அடித்துள்ளார் சாட்டை துரைமுருகன். இந்த ஒரு செய்தி தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது .அவர் கூறியதைப் போல சமீப காலமாக பயில்வான் ரங்கநாதன் வெள்ளை நிற முறுக்கு மீசையுடன் தான் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.