Connect with us
ganguva

Cinema News

ரஜினிலாம் பெரிய மேட்டரே இல்ல! வேட்டையனோடு மல்லுக்கு நிற்க தயாரான ‘கங்குவா’.. என்ன காரணம் தெரியுமா?

Rajini Surya: ஜூலை மாதத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்து பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் ஒவ்வொன்றாக ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கின்றன. கமல் நடித்த இந்தியன் 2, தனுஷ் நடித்த ராயன், விஜய் நடித்த கோட், ரஜினி நடித்த வேட்டையன், சூர்யா நடித்த கங்குவா, அஜித் நடிக்கும் விடாமுயற்சி,

விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் போன்ற பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் ரசிகர்களுக்கு பெரிய அளவில் ட்ரீட் வைக்க காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் திடீரென சூர்யா தரப்பில் இருந்து ஒரு செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

அதாவது வேட்டையன் படத்தோடு சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகப்போகிறது என்ற செய்தி தான். எப்படி ஒரே தேதியில் இவர்கள் ரிலீஸ் செய்யப் போகிறார்கள் என்ற ஒரு அதிர்ச்சியும் சினிமா பிரபலங்கள் மத்தியில் இருந்து வருகின்றன.

இதையும் படிங்க: ‘இந்தியன் 2’ க்கு பிறகு வெயிட்டான ஒரு விஷுவல் ட்ரீட் இருக்கு பாஸ்! நீண்ட வருட ரகசியத்தை உடைக்கும் கமல்

இதற்கு ஒரு சரியான விளக்கத்தை கொடுத்திருக்கிறார் கங்குவா படத்தின் ஒரு தயாரிப்பாளரான தனஞ்ஜெயன். அதாவது தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. கங்குவா திரைப்படம் ஒரு பான் இந்தியா திரைப்படமாக இருப்பதால் அந்த தேதியில் அதாவது அக்டோபர் 10 ஆம் தேதியில் ஆந்திராவில் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை .

ஹிந்தியிலும் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. தமிழில் மட்டும் தான் சூப்பர் ஸ்டார் நடித்த வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. அதுவும் அக்டோபர் 10 என்பது அதிலிருந்து தொடர்ந்து நான்கு நாட்கள் லீவு என்பதால் பெரிய அளவில் இரு படங்களுக்கும் பிரச்சனை வராது.

அதாவது தியேட்டர் சமமாக பிரிக்கப்படும். வருமானம் சமமாக பிரிக்கப்படும் .இப்படித்தான் இருக்குமே தவிர பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. ஆனால் மற்ற மாநிலங்களில் பார்க்கும் பொழுது பான் இந்தியா படமாக கங்குவா திரைப்படம் உருவாகி இருப்பதால் நமக்கு ஆந்திரா, பாலிவுட் இவைகள் தான் முக்கியம்.

இதையும் படிங்க: கமல் ஊழலை தீவிரமாக ஒழிக்கும் காட்சி!.. மீம்ஸ் போட்டு கலாய்க்கும் புளூசட்ட மாறன்..

அங்கு நமக்கு கிளியர் ஆக இருக்கிறது. இதே கங்குவா திரைப்படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய நினைத்தால் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தீபாவளி அன்றுதான் ரிலீஸ் ஆகப்போகிறது. அதுவும் இரண்டு நாட்கள் தான் விடுமுறை .மூன்றாவது நாள் வொர்க்கிங் நாள்.

அந்த இரண்டு நாள் போதாது கலெக்ஷனை அள்ளுவதற்கு. அதுமட்டுமல்லாமல் தீபாவளி அன்று ஆந்திராவிலும் பெரிய பெரிய படங்கள் ரிலீஸ் ஆகப்போகின்றன. ஹிந்தியிலும் பெரிய பெரிய படங்கள் ரிலீஸ் ஆகப்போகின்றன. அதனால் தான் ஞானவேல் ராஜா சரியாக யோசித்து இந்த தேதியை லாக் செய்து இருக்கிறார் என தனஞ்செயன் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: இந்தியன் 2 படத்துல சித்தார்த் கேரக்டரைக் கொண்டு வந்ததே இதற்குத் தானாம்… பிரபலம் தகவல்

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top