கல்கி படத்தை மிஞ்சிய ‘கங்குவா’! படத்தை பார்த்த பிரபலம் சொன்ன சூப்பர் தகவல்

Published on: July 1, 2024
kalki (2)
---Advertisement---

Ganguva Movie: அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த கங்குவா திரைப்படம் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் திரைப்படம் கங்குவா படம். ஒரு ஃபேன் இந்தியா படமாக உருவாகியிருக்கிறது.

படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் சூர்யா நடித்திருப்பது அதைவிட ஆச்சரியம். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எல்லாம் பார்க்கும் பொழுது ஷங்கரையே மிஞ்சி இருப்பார் போல சிறுத்தை சிவா என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு படத்திற்குள் ஏகப்பட்ட சிஜி வேலைகள் என படத்தை மிக பிரம்மாண்டமாக கொண்டு சென்றிருக்கிறார் சிறுத்தை சிவா.

இதையும் படிங்க: இந்த ரெண்டு படமும் வரட்டும்!.. சிவகார்த்திகேயன் ரேஞ்சே வேற!. ஸ்கெட்ச் போட்டு வேலை பாக்கும் எஸ்.கே..

பல கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் எப்போது வரும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் என சமீபத்தில் தான் அறிவித்திருக்கிறது. அதே தேதியில் தான் வேட்டையன் திரைப்படமும் ரிலீஸ் ஆக இருக்கின்றது .அதனால் சூர்யாவுக்கும் ரஜினிக்கும் இடையிலான ஒரு தொழில் முனை போட்டியாகவே இது அமையப்போகிறது .

இந்த நிலையில் கங்குவா திரைப்படத்தை பார்த்த கவிஞர் விவேகா அவருடைய முதல் விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார். அதில் அவர் கூறியது: கங்குவா திரைப்படத்தை பார்த்து மெய் சிலிர்த்தேன். இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் மிக பிரம்மாண்டம் இந்த கங்குவா திரைப்படம் .சிறுத்தை சிவா படத்தை மிக பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார். சூர்யாவின் உச்சகட்ட நடிப்பு என அவருடைய விமர்சனத்தில் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: இதனாலதான் இந்தியன் 2 நடிக்க ஒத்துக்கிட்டேன்!… இப்படி சொல்லிட்டாரே உலக நாயகன்!..

சூர்யாவின் படங்களிலேயே கங்குவா திரைப்படம்தான் அதிக  பட்ஜெட்டில் அதுவும் 3 டியில் உருவாகும் திரைப்படமாக அமைந்திருக்கிறது.கிட்டத்தட்ட 10 மொழிகளில் தயாராகியிருக்கும் இந்த படத்தில் பெரிய விஷயமாக பார்க்கப்படுவது சூர்யாவின் கெட்டப்தான். சூர்யா மேக்கப் போடுவதற்கு தினமும் 2.30 மணி நேரம் ஆகிறதாம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.