என்னதான் லேடி சூப்பர் ஸ்டாரானாலும் பழச மறக்கலப்பா! ஆச்சரியப்பட வைத்த நயன்

Published on: July 1, 2024
nayan
---Advertisement---

Actress Nayanthara:தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன் இன்று வரை ஒரு உச்சத்தில் இருக்கும் நடிகையாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் ஒரு சார்மிங்கான நடிகையாக ஹோம்லி லுக்கில் நடித்த நயனிடம் இப்போது ஏராளமான மாற்றங்கள் காணப்படுகின்றன.விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன் இரு குழந்தைகளுக்கு அம்மாவாகவும் இருக்கிறார்.

எப்போதும் தன் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தன் குழந்தைகளுக்காகவே அவருடைய நேரத்தை செலவழித்து வருகிறார் நயன். இன்னொரு பக்கம் அவரை நெருங்கும் தயாரிப்பாளர்களிடம் சில பல கண்டீசன்களை போட்டு வரும் பட வாய்ப்புகளை எல்லாம் தட்டி கழித்து வருகிறார் நயன்.

இதையும் படிங்க:  விஜய்க்கு எப்படி முடி பிரச்சினையோ? அதே தான் அஜித்துக்கும்.. இவ்ளோ நாள் தெரியாம போச்சே

லேடி சூப்பர் ஸ்டார் ஆனதில் இருந்தே நயனிடம் சில மாற்றங்கள் காணப்பட்டதாகவும் பழைய நயனே இல்லை என்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால் சமீபத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் நேசிப்பாயா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவுக்கு கலந்து கொண்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார் நயன்.

அதற்கு காரணம் அந்த படத்தின் இயக்குனரான விஷ்ணு வர்தன் மற்றும் தயாரிப்பாளரான சேவியர் ப்ரிட்டோ என்று சொல்லப்படுகிறது. ஒரு சாதாரண நடிகையாக இருந்த நயனை ரசிகர்களிடம் பெருமளவு கொண்டு சேர்த்தது விஷ்ணு வர்தனின் பில்லா படம்தான். அந்த ஒரு நன்றிக்காகக் கூட நயன் வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: ஒரே ஒரு வீடியோ! டோட்டல் இமேஜும் காலி..இன்னும் என்னெல்லாம் காத்திருக்கோ விஜய்க்கு?

இதில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்ததாம். நயன் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின் இருக்கையில் தயாரிப்பாளர் தேனப்பன் அமர்ந்திருந்தாராம். இவர் நயனை வைத்து வல்லவன் படத்தை தயாரித்தவர். இவரை பார்த்ததும் நயன் எழுந்து நின்று தேனப்பனை சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார். இதுதான் இப்போது கோடம்பாக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஏனெனில் இப்படிப்பட்டவரே கிடையாதாம் நயன். இந்தளவு யாரையும் மதித்தது இல்லையாம். அதனால் நயனிடம் கொஞ்சம் மாற்றங்கள் தெரிகிறது என இந்த செய்தியை பகிர்ந்த வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.