Connect with us

Cinema History

கமலுக்கும், ரஜினிக்கும் இருக்குற புத்திசாலித்தனம் என்னன்னு தெரியுமா? பார்த்திபன் சொன்ன சீக்ரெட்

உலகநாயகன் கமலும், சூப்பர்ஸ்டார் ரஜினியும் இன்று வரை தமிழ்த்திரை உலகின் ஜாம்பவான்களாக உள்ளனர். 80களில் இருந்து இன்று வரை ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்பது என்பது மிகப்பெரிய விஷயம். இவர்களுக்குள் இன்னும் திரையுலகில் ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது. ஆனால் பொறாமை இல்லை. அதே போல இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

இருவரும் தனக்கென தனிபாதையை சினிமா உலகில் ஏற்படுத்திக் கொண்டு வெற்றி நடைபோட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று உலகநாயகன் கமலின் இந்தியன் 2 படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதே போல பார்த்திபன் நடிப்பில் டீன்ஸ் படமும் இன்று தான் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபன் யூடியூப் சேனல் ஒன்றில் ஒரு சுவாரசியமான விஷயத்தைப் பேசியுள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

மகாராஜா படத்துல இருக்குற பிளஸ் பாயிண்ட் என்னன்னா இன்டர்வெல் வரைக்கும் கதையை சொல்லவே மாட்டாங்க. அப்படி ஒரு திரைக்கதை. அதே மாதிரியான கதையை எப்பவோ நான் ரஜினி சார்கிட்ட சொன்னேன். நான் டைரக்ட் பண்றதுக்காக. ‘ஒண்ணுமே சொல்லலன்னா அது எப்படி ஆடியன்ஸ்சுக்குத் தெரியும்’னு கேட்டார். சொல்லவே தேவையில்லை.

நீங்க பழிவாங்குறதுன்னு தெரியுது. அதை ஏன் நாம சொல்லணும்? உங்க பார்வையில, உங்க செயல்கள்ல தெரியும். அதை ஏன் நாம சொல்லணும்னு சொன்னேன். மகாராஜா படம் பார்க்கறப்ப எனக்கு ரொம்ப சந்தோஷம்? கமல் சார் அவரோட புத்திசாலித்தனத்தோட படம் இருக்கணும்னு நினைப்பாரு. ரஜினி சார் தன்னோட புத்திசாலித்தனத்தைப் படத்துல காட்டணும்னு நினைக்க மாட்டாரு. அவரு படிக்கறது எல்லாம் பெரிய பெரிய புத்தகம்.

ரஜினி ஜனரஞ்சகமான ஆடியன்ஸ்சுக்குப் பிடிக்கறதை மட்டும் காட்டுனா போதும்னு நினைப்பாரு. ஒரு சூப்பர்ஸ்டாரோட நிலைமை அதுதான். ரஜினி பிடிச்ச டைரக்டரோடு படத்துல நடிக்கணும்னு நினைச்சாரு. ஆனா அது நடக்காம போயிட்டு. அவரு நினைச்ச மாதிரி அது பெரிய கமர்ஷியலா இல்லாம போயிருக்கு. எனக்கு அப்படி ஒரு இடம் இல்லாததால நான் கண்டபடி பேசிக்கிட்டு இருக்கேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top