‘இந்தியன் 2’ படத்தில் விவேக்கிற்கு டூப் போட்டு நடிச்சது இந்த நடிகரா? அந்தக் காமெடியில் கலக்கியவர் ஆச்சே

Published on: July 17, 2024
---Advertisement---

கமல் ஷங்கர் கூட்டணியில் இன்று இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி இருக்கிறது. மிக பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இசையமைத்திருந்தார். ஆனால் அவருடைய இசை மக்களை அந்த அளவு சென்றடையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் இந்தியன் படத்தில் ஏ ஆர் ரகுமான் செய்த மேஜிக் இன்றுவரை மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. அதனால்தான் அனிருத் இசை மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். படத்தைப் பற்றி ரசிகர்கள் பலர் தங்களது இணையதள பக்கத்தில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

படத்தில் கமலஹாசனின் நடிப்பு மிகப் பிரமாதமாக இருக்கிறது என்றுதான் அனைவரும் பாராட்டி வருகிறார்கள். ஆனால் சங்கர் எப்போதும் போல இந்த படத்தில் அவருடைய டெக்னாலஜி ஒத்துழைக்கவில்லை என்று பலரும் கூறி வருகிறார்கள். அதேபோல் திரைக்கதையில் திரைப்படம் சற்று மெதுவாகத்தான் செல்கிறது என்றும் பலபேர் கூறி வருகிறார்கள்.

இதில் கமலஹாசனுடன் விவேக் நடித்திருக்கும் காட்சிகள் பெருமளவு வரவேற்பை பெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது .அதுவும் எமோஷனல் காட்சியில் விவேக் அற்புதமாக நடித்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். கடந்த 2021 ஆம் ஆண்டு மாரடைப்பால் விவேக் காலமானார். அப்போது இந்தியன் 2 திரைப்படம் புரொடக்ஷனில் இருந்து வந்தது.

அதனால் பாதி படத்திற்கு மேல் விவேக் நடிக்க முடியவில்லை. அதேசமயம் கமலுடன் தான் நடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு இந்த படத்தில் நிறைவேறியது. அதை அவர் உணர்வு பூர்வமாக இருந்து பார்க்க முடியாத நிலை இப்போது இருக்கிறது. இன்று அவர் நம்மிடம் இல்லை.

இந்த நிலையில் விவேக் மறைந்த பிறகு அவருக்கு பதிலாக டூப் போட்டு நடிக்க பிரபல நகைச்சுவை நடிகர் கோவை பாபு என்பவர் தான் நடித்துக் கொடுத்தாராம். அவர் ஏற்கனவே பல படங்களில் ஒரு துணை காமெடி நடிகராக நடித்து வருகிறவர். அதுமட்டுமல்லாமல் விவேக் உடன் சேர்ந்து காதல் சடுகுடு என்ற படத்தில் ஒரு பிரபலமான காமெடி காட்சியில் நடித்திருப்பார் . மைனர் குஞ்சுவை சுட்டுட்டாங்களா என்ற ஒரு காமெடி மிகவும் பிரபலமானது. அதில் மைனர் குஞ்சுவாக நடித்தவர் தான் இந்த கோவை பாபு.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment