இந்தியன் 2 அலையில் காணாமல் போன தங்கலான்!.. தப்பான டைம் என புலம்பும் ஃபேன்ஸ்!.. கங்குவா நிலைமை?..

Published on: July 17, 2024
---Advertisement---

இந்தியன் 2 திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் உலகம் முழுவதும் அந்த படத்தை பற்றிய பேச்சுக்கள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. லைக்கா தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன் மற்றும் சித்தார்த் என இந்தியன் 2 படக்குழுவினர் தொடர்ந்து அந்த படத்துக்கான புரோமோஷன்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திடீரென தங்கலான் படத்தின் டிரைலரை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் நேற்று வெளியிட்ட நிலையில், அந்த படம் பற்றியும் சியான் விக்ரமின் நடிப்பு பற்றியோ சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் எழாமல் இந்தியன் 2 படத்திற்கான விவாதங்கள் மட்டுமே நடைபெற்று வருகின்றன.

தங்கலான் டிரைலர் அதிகபட்சமாக மூன்று மில்லியன் வியூஸ்களை மட்டுமே இதுவரை பெற்றுள்ளது. தங்கலான் படத்தையும் பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்யப் போவதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறிவந்த நிலையில், நேற்று மற்ற மொழிகளில் வெளியான டிரைலர்கள் பெரிதாக எடுபடவே இல்லை.

மாளவிகா மோகனனை சூனியக்காரியாக காட்டிய இடத்திலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு மொத்தமாக குறைந்து விட்டதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகவுள்ள தங்கலான் தப்பிக்குமா? என்கிற கேள்விகளும் அதிகரித்துள்ளன.

சியான் விக்ரம் இந்த படத்தில் வசனமே பேசவில்லை என்று தகவல்கள் வெளியான நிலையில், டிரைலரில் அதிக வசனங்களை சியான் விக்ரம் பேசியதும் குழப்பத்தை உருவாக்கியுள்ளது.

இதேபோல ரஜினிகாந்தின் வேட்டையன் படத்துடன் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்றும் வசூல் அடி வாங்குமே என்றும் சினிமா வட்டாரத்திலே பலர் ரிலீஸ் தேதியை மாற்றக் கூறி வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment