ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் தீபாவளிக்கு வெளியாகுமாம். அதே நேரம் அஜீத் நடித்து வரும் விடாமுயற்சி வெளிவர வாய்ப்பில்லையாம். இதற்கு பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் சொல்லும் காரணத்தைப் பார்ப்போமா…
வேட்டையன் நிச்சயமாக தீபாவளிக்கு வரும். மகிழ்திருமேனியைப் பொருத்தவரைக்கும் கொஞ்சம் ஸ்பீடு குறையா இருக்காரு. அஜீத்தைப் பொருத்தவரைக்கும் இவ்ளோ நாள் சூட்டிங் இல்லாம இருந்துச்சு. இப்ப பணம் எல்லாம் புரட்டி சூட்டிங்கை முடிக்கிறாங்க.
எப்படியாவது அதை முடிச்சிக் கொடுத்துடணும்னு அஜீத் பண்றாரு. ஷாலினிக்கு ஆபரேஷன்னு தெரிஞ்சதும் உடனே போயிட்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிக்கிறாரு. சின்சியாரிட்டியோடு அவர் பண்ணித் தர்றாரு. ஆனா அவங்க தான் எப்படியாவது கஷ்டப்பட்டு இந்தப் படத்தை தீபாவளிக்குக் கொண்டு வரணும்னு நினைக்கணும்.
ஆனா இது ஒருத்தர் கையில இல்ல. கூட்டுமுயற்சி. யாராவது ஒரு சாதாரண ஆளு தப்பு பண்ணினாலும் படம் வெளியாக லேட்டாகும்.
மகிழ்திருமேனி நினைக்கிற அளவு படம் வரலைன்னு நினைக்கிறதும் தாமதத்துக்குக் காரணம். இந்த மாதிரி இயக்குனர்கள் பெரிய நடிகர்கள் கூட சேரும் போது சிக்கல் வந்துடுது. அருண் விஜய் மாதிரி அவருக்கு இணக்கமான ஆளு கூட டிராவல் பண்ணிட்டாருன்னா ஒரு காட்சியை 5, 6 தடவை எடுக்க முடியும். அதுக்கு அவர் தயாரா இருப்பாரு.
ஆனா அஜீத் மாதிரி ஒரு பெரிய நடிகர வச்சிக்கிட்டு அந்ம மாதிரி பண்ண முடியாது. ஒரு கட்டத்துல அவங்களுக்கே சலிச்சிப் போயிடும். என்னடா இவருட்ட வந்து சிக்கிட்டோமேன்னு நினைப்பாங்க. அதுக்கு அப்புறம் இன்வால்வ் ஆக மாட்டாங்க. ஆனா அருண்விஜய் மாதிரி ஆளுக்கு வெற்றி தேவைப்படுது.
Also Read: வயதான மாப்பிள்ளைக்கு 2வது மனைவி… வரலட்சுமி சம்மதிக்க என்ன காரணம்? ரகசிய டீலை உடைத்த பிரபலம்
அதனால என்ன சொன்னாலும் திரும்ப திரும்ப அவரு பண்ணிக்கிட்டே இருப்பாரு. அஜீத்தைப் பொருத்தவரை முன்னாடி கதையே கேட்க மாட்டார். சம்பளத்தைப் பற்றி மட்டும் பேசுவார். நீங்க இறங்கிப் பண்ணப் போறீங்க. அப்படின்னா நல்ல கதையைத் தான் கொண்டு வந்துருப்பீங்கன்னு சொல்வார் அஜீத். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
