Connect with us

Cinema News

சித்தார்த்தா இப்படிப் பேசுறாரு…. இந்தியன் 2க்குப் பிறகு பெரிய ஞானியா ஆகிட்டாரோ..?!

இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிகர் சித்தார்த் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் அடுத்த வாரம் என்பதால் படம் பற்றி ஒவ்வொரு சானலுக்கும் அதில் நடித்த நடிகர்கள் பேட்டி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சித்தார்த் என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.

ஒரு விஷயத்தை விஷூவல்ஸ் பண்ணி அதை வந்து மைன்ட்ல இருந்து யுனிவர்ஸ்க்கு சிக்னல் பண்ணினேங்கன்னா அதை யுனிவர்ஸ் அமைச்சிக் கொடுக்கும். உங்களுக்கு என்ன வேணும்னு உங்களுக்கே தெரியாதுன்னா நீங்க வெளிப்படுத்துறதுல பிரயோஜனமே கிடையாது.

நம்மளை சின்ன வயசுல நல்ல விஷயங்களை சொல்லி வளர்ப்பாங்க. அது நல்ல விஷயம் தான். மத்தவங்க கண்ணுல நாம நல்லவங்கன்னு பேரு வாங்கணும்னு சொல்வாங்க. உங்களுக்கு என்ன வேணும்னு நீங்களே முடிவு பண்ற வயசு. தனியா ஒரு ரூம்ல உட்கார்ந்து கண்ணை மூடிக்கிட்டு உங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது எது என்பதைக் கண்டுபிடிங்க.

அதுக்கு அப்புறம் வெளிப்படுத்துங்க. நான் எனது சொந்த அனுபவத்தை சொல்றேன். அப்போ யுனிவர்ஸ் உங்களுக்கு வேண்டியதைத் தரும். முதல்ல உங்க மேல அன்பை வெளிப்படுத்துங்க. அது உங்க மேல அன்பை வெளிப்படுத்தாம பிறர் மீது வெளிப்படுத்தாதீங்க. எனது சொந்த அனுபவங்களை சொல்வதால இது நிச்சயம் உங்களை நல்லநிலைக்கு மாற்றும்.

நீங்க என்னன்னு உங்களுக்கு மட்டும் தான் தெரியணும். இன்னொருத்தர் பார்வையில நீங்க யாருன்னு தெரியவே கூடாது. ஷங்கர் சார்கிட்ட நான் கேட்டேன். எப்படி சார் உங்களோட ரெண்டாவது படத்துல நான் வந்தேன்னு? உன் நிஜ வாழ்க்கையில ஒரு கோபம் இருக்குல்ல. அதை அப்படியே இந்தப் படத்துல வந்து கொட்டுய்யான்னாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

நடிகர் சித்தார்த் ஏற்கனவே ஷங்கரின் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்தார். இவர் படம் நடிக்க வரும் முன்பே இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு தான் வந்தாராம். இவர் கடைசியாக நடித்த சித்தா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top