Connect with us

Cinema News

சிறுசா இருந்தாலும் சிறப்பு… இந்தியன் 2ல கமலோட பேர விட என் பேரு சூப்பர்…! எஸ்.ஜே.சூர்யா

இந்தியன் 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் யூடியூப் சேனல் ஒன்றில் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

இந்தியன் 3ல தான் கமல் சாரோட காம்பினேஷன் அதிகமா இருக்கும். நீங்க அதிருப்தியா ஆகிவிடக்கூடாதுன்னு தான் இப்பவே சொல்றேன். இந்தியன் 2 படத்துல கமல் சாரோட நடிக்கப் போறோம்னதும் வயித்துல இந்த இடத்துல பிக் அப்படின்னது. பட்டர்பிளை மூவ்மெண்ட் தான்.

அவர் மீது மரியாதையும், அன்பும் இருந்தாலும் அவங்க முன்னாடி நடிக்கும்போது நம்ம பாத்திரத்தை சரியா செஞ்சா தான் அவங்களை நம்ம நேசிக்கிறதுக்கே கரெக்டான விஷயமா இருக்கும். நம்ம அதை சரியா பண்ணலன்னா அவங்களுக்கும் அது டிஸ்டர்பா ஆயிடும்.

நான் ஸ்டார்ட் கேமரான்னதும் வேற ஆளா ஆயிடுவேன். அதனால எனக்கு அது பிரச்சனை இல்ல. அந்தக் கேரக்டரோட பேரு வந்து ஸ்பெஷலானது. சிறுசா இருந்தாலும் சிறப்பா இருக்கும். இந்தப் படத்துல சேனாபதி பேரை விட என் பேரு சூப்பரான பேரு என்ற எஸ்.ஜே.சூர்யா பெரிய ஹைப்பைக் கொடுத்து விட்டார். என்ன பேருன்னு சொல்ல மாட்டேங்கறீங்கன்னு ஆங்கர் கேட்கும்போது படம் பாருங்க தெரியும்னு சிரித்தபடியே சொல்லி விட்டார்.

கமல் சார் நல்லா நடிப்பாருங்கறது சிங்கம் நல்லா கர்ஜிக்கும். திமிங்கலம் நல்லா நீச்சலடிக்கும்னு சொன்ன மாதிரி. எவரெஸ்ட் உயரமாத் தான் இருக்கும். ஆனா ஒவ்வொரு தடவையும் அது நமக்கு வித்தியாசமான அனுபவங்களைத் தந்து கொண்டே இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியன் 2 படம் உலகநாயகன் கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாகத் தயாராகி உள்ளது. படத்தின் புரொமோஷன் வேலைகள் நடந்து வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை படம் வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே உள்ளது. எஸ்.ஜே.சூர்யாவைப் பொருத்தவரை நடிப்பு அரக்கன் என்பார்கள்.

கமல் ஒரு நடிப்பு அகராதி. இருவரும் இணைந்து நடிப்பதால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் கமல் முதல்முறையாக அரசியல்வாதியாக இருந்து நடிப்பதால் எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் உண்டாகியுள்ளன. படத்திற்கு உள்ள ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் கமல், ஷங்கர் கூட்டணி நிறைவேற்றுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top