சிங்கம் புலியிடம் வாய்ப்பு கேட்ட ரஜினி!.. எப்பா இதெல்லாம் சொல்லவே இல்லையே!…

Published on: July 17, 2024
singampuli-rajni
---Advertisement---

1997ல் வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினியின் சூப்பர்ஹிட் படம் தான் அருணாச்சலம். படத்தை இயக்கியவர் சுந்தர்.சி. ரஜினியுடன் இணைந்து சௌந்தர்யா, ரம்பா, மனோரமா, வடிவுக்கரசி, ஜெய்சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவாவின் இன்னிசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர்.

ரஜினியைப் பொருத்தவரை சூட்டிங்ஸ்பாட்டில் ஜாலியான டைப். அனைவருடனும் இயல்பாக பழகும் சுபாவம் கொண்டவர். அவருக்கு மனதில் பட்டதை டப்புன்னு சொல்லி விடுவார். நடிகரும், இயக்குனருமான சிங்கம்புலி விஷயத்திலும் இது நடந்துள்ளது. ஆனால் கொஞ்சம் காமெடியாகி விட்டது என்றே சொல்லலாம்.

அருணாச்சலம் படப்பிடிப்பின் போது நடந்த சுவையான அனுபவம் ஒன்றை நடிகர் சிங்கம்புலி ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அவர் சொன்னது இதுதான். அருணாச்சலம் படத்தின் போது ஒரு நாள் பார்ல உட்கார்ந்து வில்லனுக்கு எழுதுற மாதிரி ரஜினிகாந்த் லட்டர் ஒன்று எழுதுவார். அதை எழுதியதும் ரகுவரன், வி.கே.ராமசாமி எல்லாரும் படிப்பாங்க. அதுல வந்து இனி தான் ஆரம்பம்னு எழுதணும். ரஜினி சார் இனி தான் ஆரம்பம்னு எழுதி அவனுக்கு அனுப்புடா லட்டரைன்னு சொல்வார்.

அப்போ இனிதான் ஆரம்பம்கற அந்த ஹேண்ட் ரைட்டிங்கை வந்து ஆர்ட் டிபார்ட்மென்ட்ல நிறைய பேரு எழுதுனாங்க. நான் ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்து இனிதான் ஆரம்பம்னு எழுதி டைரக்டர்கிட்ட கொடுத்தேன். இது எப்படி இருக்குன்னு கேட்டேன். ‘ஓ… இது நல்லாருக்கே… இதையே சூட் பண்ணுங்கன்னு டைரக்டர் சொல்லிட்டாரு’. அப்போ ரஜினி சார் இப்படி எழுதுற மாதிரி பண்ணுவாரு. எடுத்தவுடனே ஷாட் இருக்கும். அவரே கேட்டாரு. ‘இதை யார் எழுதுனா?’ சிங்கம்புலி.

‘சிங்கம்புலின்னு நம்ம டபுள் ஆக்ட்ல பண்ணலாமா?;ன்னு கேட்டார். அப்படியே சிரிச்சேன். வாழ்த்துக்கள். இனி தான் ஆரம்பம்னு கைகொடுத்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். சிங்கம்புலியை நமக்கு நகைச்சுவை நடிகராகத் தான் தெரியும். ஆனால் அவர் சிறந்த இயக்குனரும் கூட. ராம்சத்யா என்ற பெயரில் 2002ல் தல அஜீத் நடித்த ரெட் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.