நடிகர் ஜெயம் ரவி பற்றி பெரிதாக எந்தவொரு கிசுகிசுவும் இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவர் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக கூறுகின்றனர். அதனை கிட்டத்தட்ட உறுதி செய்யும் விதமாக இத்தனை ஆண்டுகள் கணவருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை திடீரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஆர்த்தி நீக்கிவிட்டது பலரையும் திடுக்கிட வைத்தது.
மேலும், உலா வரும் டைவர்ஸ் பற்றிய தகவல் குறித்தும் இதுவரை எந்தவொரு மறுப்பும் தெரிவிக்காமல் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் இருக்கின்றனர். இரு மகன்கள் உள்ள நிலையில், தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிந்ததை போலவே ஜெயம் ரவியும் ஆர்த்தியும் பிரியப் போகிறார்களா எனக் கேட்கின்றனர்.
தனுஷ் தான் இவர்கள் பிரிவுக்கும் காரணம் என சில யூடியூபர்கள் பேச ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், ஜெயம் ரவியை பற்றி ஒரே நெகட்டிவ் செய்திகளாக உலா வரும் நிலையில், ஒருவழியாக நல்ல செய்தி ஒன்றை இயக்குனர் ராஜேஷ். எம் கூறியுள்ளார்.
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், மிஸ்டர் ரோமியோ படங்களை இயக்கிய ராஜேஷ். எம் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகனை வைத்து இயக்கி வரும் பிரதர் திரைப்படம் என்ன ஆனது என்றே தெரியாமல் இருந்த நிலையில், தற்போது படம் ரெடியாகி விட்டது என்றும் ஹாரிஷ் ஜெயராஜ் ஸ்டூடியோவில் இறுதி பாடல் ரெடியாகிறது என்றும் விரைவில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ஜெயம் ரவி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் எனக் கூறியுள்ளார்.
பிரதர் படத்தின் ஆடியோ லாஞ்ச், டீசர், டிரெய்லர் மற்றும் படத்தின் ரிலீஸ் என வரிசையாக அப்டேட்கள் வெளியாகும் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சோலோவாக கடைசியாக ஜெயம் ரவிக்கு கோமாளி தான் வெற்றிப் படம்.
அதன் பின்னர், பொன்னியின் செல்வன் படம் ஓடியது. மற்றபடி அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் ஃபிளாப் ஆகி வரும் நிலையில், பிரதர் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
