Cinema News
சியான் விக்ரமை அடுத்து இயக்கப் போவது அந்த இயக்குநரா?.. இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கலையே!..
பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. சியான் விக்ரமுடன் போட்டிக்கு சிவகார்த்திகேயன் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அஜித்தின் விடாமுயற்சியுடன் மோதுவதற்காக தீபாவளி டேட்டை ஃபிக்ஸ் செய்து விட்டார்.
நேற்று தங்கலான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான மினிக்கி மினிக்கி பாடல் வெளியாகி ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தங்கலான் படத்தை எப்போதோ சியான் விக்ரம் முடித்து விட்டு அடுத்ததாக சித்தா இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: ஒரு சின்ன சீனுக்கு நாள் முழுவதும் கஷ்டப்பட்ட கமல்!.. மிரண்டுபோன தக் லைப் படக்குழு!…
2 பாகங்களாக உருவாகி வரும் அந்த படமும் கிளைமேக்ஸை நிறைந்து விட்டதாக கூறுகின்றனர். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது அந்த படம்.
இந்நிலையில், சியான் விக்ரம் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்த நிலையில், தற்போது அருள்நிதியை வைத்து மெளனகுரு மற்றும் ஆர்யாவை வைத்து மகாமுனி எனும் தரமான படத்தை இயக்கிய சாந்தகுமார் தான் சியான் விக்ரமுக்கு கதை சொல்லியிருப்பதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: மத்தவன் காசு போகலாம்!. நம்ம காசு போகக்கூடாது!. சூர்யா – கார்த்தி எடுத்த அந்த முடிவு!…
சாந்தகுமார் சொன்ன கதை சியான் விக்ரமுக்கு பிடித்துப் போன நிலையில், அடுத்த கட்ட வேலைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சியான் விக்ரம் தனது ஒட்டுமொத்த உடல் உழைப்பையும் கொட்டி நடிக்கக் கூடிய நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தொடர்ந்து நல்ல நல்ல இயக்குநர்களை தேர்வு செய்து நடித்து வரும் சியான் விக்ரமுக்கு சீக்கிரமே பெரிய பெரிய வெற்றிகள் காத்திருக்கின்றன.
இதையும் படிங்க: மீண்டும் அந்த ‘பேய்’ பட இயக்குனருடன் கைகோர்க்கும் நயன்… கதை யாரோடதுனு தெரியுமா…?