Cinema News
ஓவரா தின்னு உடம்பை கெடுத்துக்கிட்ட ஸ்ரீதேவி மகள்!.. இப்போ 2 நாள் மருத்துவமனையில் அட்மிட்டாம்!..
நடிகை ஜான்வி கபூருக்கு ஃபுட் பாய்சனிங் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவருடைய அப்பா போனி கபூர் அறிவித்துள்ளார். தெலுங்கில் தேவரா படத்தில் நடித்து வரும் ஜான்வி கபூர், இந்தியில் உலாஜ் படத்தில் நடித்து முடித்து விட்டு அதன் ரிலீஸ் புரமோசனுக்காக சுற்றிக் கொண்டிருந்தார்.
நார்த், சவுத் என மாறி மாறி டிராவல் செய்து வரும் ஜான்வி கபூர் வித விதமான உணவுகளை சாப்பிட்டு வந்த நிலையில், ஃபுட் பாய்சன் ஆகியிருக்கலாம் என்கின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜான்வி கபூர், 2 நாட்களில் வீடு திரும்புவார் என போனி கபூர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: என் நிலைமை மோசமா போச்சு.. கக்கூஸ் வேலைக்குக் கூட கூப்பிட மாட்றாங்க! புலம்பும் நடிகை
தமிழில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என வரிசையாக அஜித்தை வைத்து படங்களை தயாரித்த போனி கபூர் துணிவு படத்துக்குப் பிறகு கோலிவுட்டில் படங்களை தயாரிப்பதை விட்டு விட்டு பாலிவுட் பக்கம் சென்றார்.
பல ஆண்டுகளாக உருவாகி வந்த மைதான் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில், பல கோடி லாஸ் ஆகி விட்டதாக கூறுகின்றனர். சமீபத்தில் அம்பானி மகன் திருமணத்தில் ஜான்வி கபூர் கலந்து கொண்டு கவர்ச்சி தரிசனம் கொடுத்தார். போனி கபூருக்கும் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் பிறந்த மூத்த மகள் தான் ஜான்வி கபூர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
இதையும் படிங்க: விஜய் ஆண்டனியை ஃபாலோ செய்யாதீங்க! என்ன மாதிரியான நோய் வரும் தெரியுமா? பிரபல டாக்டர் பகீர்
ஜான்வி கபூரின் தங்கை குஷி கபூரும் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சவுத்தில் இருந்து அம்மா ஸ்ரீதேவி வட இந்தியாவுக்கு சென்று பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக கலக்கினார். இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய அவரது மகள்கள் இருவரும் பாலிவுட்டில் ஆரம்பித்து, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளனர்.
ஜான்வி கபூர் சீக்கிரம் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். உலாஜ் படத்தின் புரமோஷனை தவிர்க்க இப்படி செய்துள்ளாரா என்கிற விமர்சனங்களும் கிளம்பி உள்ளன.
இதையும் படிங்க: இளையராஜாவோட பயோபிக் எப்படி இருக்கணும்னு தெரியுமா? பிரபலம் சொல்றதைக் கேளுங்க…