Connect with us

Cinema News

கமல், மோகன்லால், மம்மூட்டி, பகத் ஃபாசில்!.. ஒரே படத்தில் இத்தனை பேரா?.. வெளியானது செம டிரைலர்!..

தமிழில் சூர்யா, சித்தார்த், விஜய்சேதுபதி, அசோக் செல்வன், அரவிந்த்சாமி, கெளதம் மேனன், பார்வதி, அதிதி பாலன், அதர்வா, பிரசன்னா, யோகி பாபு, பிரக்யா மார்ட்டின் என பல பிரபலங்கள் இணைந்து நடித்த நவரசா எனும் ஆந்தாலஜி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.

9 இயக்குநர்கள், 9 கதை என அந்த ஆந்தாலஜி நவரசா என வெளியானது. அதே போல தற்போது மலையாளத்தில் பிரபலமான நாவலாசிரியர்களின் சிறுகதைகளை மலையாள திரையுலகின் முன்னணி பிரபலங்களுடன் கமல்ஹாசனும் சேர்ந்து நடித்துள்ள மனோரதங்கள் எனும் ஆந்தாலஜி ஜீ5 ஓடிடியில் உருவாகி இருக்கிறது.

இதையும் படிங்க: விஜயகாந்தை நல்லவருனு சொல்றீங்களே! அவருக்கு மேல ஒருத்தர் இருக்காரு.. யார சொல்றாரு?

இதில், கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், பகத் ஃபாசில், பார்வதி, பிஜு மேனன், நதியா, அபர்ணா பாலமுரளி, மதுபாலா, இந்திரன்ஸ், நெடுமுடி வேணு ஏகப்பட்ட பேர் நடித்த இந்த ஆந்தாலஜி தொடர் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ஓடிடி பக்கம் மலையாள திரையுலகின் இத்தனை டாப் ஹீரோக்கள் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார்களா? என்பதே பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. பிரியதர்ஷன் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள் இந்த கதைகளை இயக்கி உள்ளனர்.

இதையும் படிங்க: சினிமாவே வேண்டாம் என்ற கலைஞரை மல்லுக்கட்டி அழைத்த எம்ஜிஆர்… பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்குதா?

தனித்தனி கதைகளாக இந்த ஆந்தாலஜி உருவாகி இருக்கும் நிலையில், ஒன்றாக இணைக்கப்பட்ட ஆந்தாலஜி படமாக சுதந்திர தினத்துக்கு தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியாகிறது.

கமல்ஹாசனின் குரல் தமிழில் இடம்பெறாதது தான் ரசிகர்களுக்கு சற்றே வருத்தத்தை அளிக்கிறது. கமல்ஹாசன் தமிழிலும் டப் செய்திருந்தால், இன்னமும் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கருதி வருகின்றனர். இதே போல தமிழ் சிறுகதைகளையும் படங்களாக உருவாக்க வேண்டும் என்றும் ரஜினிகாந்த், விஜய், அஜித், கமல்ஹாசன், விக்ரம் உள்ளிட்ட டாப் ஹீரோக்கள் நடித்தால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஏகப்பட்ட தூக்க மாத்திரை!.. தற்கொலைக்கு முயற்சி பண்ணேன்!.. நடிகை சொன்ன பகீர் தகவல்!…

 

 

google news
Continue Reading

More in Cinema News

To Top