Connect with us

latest news

என்னங்கய்யா… நீங்களே இப்படி கொளுத்திவிடலாமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் சர்ச்சை குறித்து நடிகர் விளக்கம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் செந்தில் கேரக்டரில் இருந்து வசந்த் வசி வெளியேறியதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார்.

விஜய் டிவியில் அண்ணன் மற்றும் தம்பிகளை மையமாக வைத்து ஒளிபரப்பான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், குமரன், சரவண விக்ரம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். முதல் சீசனே 1348 எபிசோட் ஒளிபரப்பானது. 

விஜய் தொலைக்காட்சியில் அதிக நாட்கள் ஒளிபரப்பான சீரியல் என்ற பெயர் பெற்றது. முதல்முறையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதையடுத்து, பாண்டியன் ஸ்டோர்ஸின் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது. பெரும்பாலும் விஜய் தொலைக்காட்சியில் இரண்டாவது சீசன் இதுவரை வெற்றி கண்டது இல்லை.

இதையடுத்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது சீசனும் முதலில் பெரிய அளவு வரவேற்பு பெறவில்லை. ஆனால் தொடர்ச்சியாக விறுவிறுப்பான கட்டங்கள் வந்த நிலையில் சீரியலுக்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது இத்தொடரில் செந்தில் கேரக்டரில் நடித்து வரும் வசந்த் வசீ வெளியேறியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் கூறும்போது, நானும் அதுகுறித்து கேள்விப்பட்டேன். ஆனால் அது இன்னமும் உறுதியாகவில்லை. விரைவில் என்ன நடக்கிறது எனத் தெரிந்துவிடும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசனிலே நடித்திருக்கேன்.

அப்போது நான் ஒரு ஊரில் ராஜகுமாரி சீரியலில் ஹீரோவாக நடித்த என்னை சைட் ரோலில் கேட்டப்போது தயங்கினேன். இருந்தும் அவர்கள் இரண்டு மாதம் போது எனக் கேட்டு தான் நடிக்க வைத்தார்கள். அதன் பின்னர் இன்னொரு நடிகரை வைத்து அந்த கேரக்டரை கிளைமேக்ஸ் வரை கொண்டு சென்றனர் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top