அவரு அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்… ‘பளார்’ கேள்விக்கு ‘பொளேர்’னு பதில் சொன்ன டாப் ஸ்டார்…!

Published on: August 8, 2024
---Advertisement---

பிரசாந்த்தின் ஒவ்வொரு வளர்ச்சிக்குப் பின்னாலும் அவரது தந்தையும் இயக்குனருமான தியாகராஜன் இருக்கிறார். அவரது பேச்சைத் தட்டாமல் இதுவரை பிரசாந்தும் வளர்ந்து வருகிறார். தற்போது ‘அந்தாதூண்’ என்ற படத்தின் ரீமேக்காக தமிழுக்குத் தகுந்தபடி பல மாற்றங்கள் செய்து அவரது தியாகராஜன் ‘அந்தகன்’ என்ற பெயரில் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் ஒரு ஆக்ஷன் கிரைம் திரில்லர் படம். படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். ஏன்னா நீண்ட நாள்களாக இந்தப் படம் வருவதாக இருந்து ரசிகர்களை ரொம்பவே காத்திருக்க வைத்து விட்டது. இந்த நிலையில் படம் வரும் சுதந்திரத்தினத்தன்று ரிலீஸாகிறது. படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மனோபாலா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியவர் தியாகராஜன். வசத்தை பிரபல நாவல் ஆசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது 2018ல் இந்தியில் வெளியான அந்தாதூண் என்ற படத்தின் ரீமேக்.

சிம்ரன் கூட கெமிஸ்ட்ரி எப்படி இருந்ததுன்னு கேட்கும்போது, கெமிஸ்ட்ரி ரொம்ப நல்லாருந்தது. அந்த வார்த்தையை அறிமுகப்படுத்தினதே நான் தான். சிம்ரன் இந்தப் படத்துல ஜோடியா இல்லையான்னு எனக்குத் தெரியாது. அது நம்ம படம் பார்த்தா தான் தெரியும். ஆனா சாங்ல ஆடுனதுக்குக் காரணம் அதுல ஒரு டுவிஸ்ட் இருக்கு. இவ்வாறு அவர் காமெடியாக பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

பிரசாந்த்துடன் சிம்ரன் ஜோடி சேர்ந்த படங்கள் எல்லாமே சூப்பராக இருக்கும். பார்த்தேன் ரசித்தேன், ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், தமிழ் ஆகிய படங்களில் இருவருக்கும் இடையே ஒரு நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கும். குறிப்பாக பாடல்களில் அவர்கள் ஆடும் நடனம் பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘உங்களுக்கு வில்லனா அப்பா நடிப்பாரா’ன்னு கேட்கப்பட்டது. அதற்கு பிரசாந்த் ‘வில்லனா நடிக்க சான்ஸே கிடையாது. நாங்க ரெண்டு பேரும் நடிச்சா அது டபுள் ஹீரோ ஆக்ஷன் சப்ஜெக்டாகத் தான் இருக்கும். ரெண்டு பேரும் ப்ரண்டாகத் தான் நடிப்போம். அவரு ட்ரை பண்ணினாலும் வில்லனா நடிக்கவும் முடியாது’நீண்ட இடைவெளிக்குப் பிறகு டாப்ஸ்டார் பிரசாந்தின் படம் திரைக்கு வருகிறது. அந்தகன் படமும், விஜய் உடன் நடித்த கோட் படமும். இதுல அந்தகன் படம் முந்திக் கொண்டதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.னு சிம்பிளா சொன்னார் டாப் ஸ்டார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment