இது ராயன் இல்ல!. வட சென்னை 2.. வெற்றிமாறனுக்கு வேலை மிச்சம்!. பங்கம் செய்த பிரபலம்!…

Published on: August 8, 2024
---Advertisement---

தமிழ் சினிமாவில் இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ராயன். நடிகர் தனுஷின் 50-வது திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை தனுஷ் இயக்கி நடித்திருக்கின்றார். சன் பிக்சர் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

மேலும் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், செல்வராகவன், எஸ்ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட ஏகப்பட்ட திரை பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இன்று காலை வெளியான இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் பாசிட்டிவ்வான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.

படம் தாறுமாறாக இருப்பதாகவும் அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை எதிர்பார்க்கும் வகையில் படம் இருந்ததாக தெரிவித்தார்கள். மேலும் கிளைமாக்ஸ் காட்சிகள் வெறித்தனமாக இருந்தது, ஏ ஆர் ரகுமானின் இசை மிகப்பெரிய பலம். எஸ் ஜே சூர்யா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கின்றார்.

செல்வராகவனுக்கு அந்த அளவுக்கு படத்தில் இடமில்லை என்றாலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார் என்று காலை முதலே இணையதள பக்கங்களில் விமர்சனங்கள் பாசிட்டிவாக இருந்து வருகின்றது. இந்நிலையில் எல்லா திரைப்படத்திற்கும் வழக்கம் போல் தன்னுடைய பாணியில் விமர்சனம் கூறும் பயில்வான் ரங்கநாதன் இந்த திரைப்படத்திற்கும் தன்னுடைய விமர்சனத்தை பகிர்ந்து இருக்கின்றார்.

இந்த திரைப்படத்திற்கு ராயன் என்ற பெயருக்கு பதிலாக வடசென்னை 2 என பெயர் வைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும். வடசென்னை திரைப்படம் இனி வரவில்லை என்று கவலைப்பட வேண்டாம், அதற்கு பதிலாக தான் ராயன் திரைப்படம் வந்துவிட்டது. வெற்றிமாறனுக்கு வடசென்னை 2 திரைப்படத்தை எடுப்பதற்கான வேலை மிச்சம் என்று கூறி இருக்கின்றார்.

இருப்பினும் படத்தைக் குறித்து அவர் பாசிடிவ்வான விமர்சனங்களை தான் தெரிவித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தின் மூலமாக நடிகர் தனுஷ் மிகச் சிறந்த இயக்குனராக நிரூபித்து விட்டார். பாதி வெற்றிமாறன், பாதி செல்வராகவனை பார்த்தது போல் இருந்தது. பவர் பாண்டி திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த தனுஷ் இந்த திரைப்படத்தின் மூலமாகவும் சிறந்த இயக்குனராக நிரூபித்து விட்டார்.

ஏஆர் ரகுமானின் இசை இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலம். 2 பாடல்கள் தான் இப்படத்தில் இருக்கின்றது. ஆனால் இரண்டுமே டாப் ஹிட்டு. அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் பின்னணி இசைக்காகவே ஒருமுறை பார்க்கலாம், தனுஷின் இயக்கத்திற்காக ஒரு முறை பார்க்கலாம் என்று அவர் கூறியிருந்தார். எப்போதும் திரைப்படத்தை குறித்து சர்ச்சையான விமர்சனங்களை கூறி வரும் பயில்வான் ரங்கநாதன் இப்படி பாசிட்டிவான விமர்சனங்களை கூறியிருப்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment