நடிகருடன் அந்தமாதிரி உறவில் இருக்காரா?.. சின்னத்திரை நயன்தாரா என்ன இப்படி சொல்லிட்டாரு!..

Published on: August 8, 2024
---Advertisement---

சின்னத்திரையில் நயன்தாரா போல நம்பர் ஒன் இடத்தில் இருந்த வாணி போஜன் ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டு அம்னீசியா, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், மிரள், பாயும் ஒளி நீ எனக்கு, லவ், அஞ்சாமை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் ஏகப்பட்ட தமிழ் பெண்களின் இதயங்களை கவர்ந்தவர் வாணி போஜன். 35 வயதாகும் இவர் ஆரம்பத்தில் 2010ம் ஆண்டு ஓர் இரவு எனும் படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் அவருக்கு சரியாக போகவில்லை.

அசோக் செல்வன், ரித்திகா சிங்குடன் இணைந்து இவர் நடித்த ஓ மை கடவுளே படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். அந்த படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.

அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் எனும் படத்தை இயக்கி வருகிறார். அதிலும், வாணி போஜனுக்கு வாய்ப்புக் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தனக்கு வந்த சில படங்களை மற்ற நடிகைகள் தட்டிப் பறித்து விட்டதாகவும், மற்ற நடிகைகளுக்கு ஒரு படத்தில் வாய்ப்பு கிடைக்கப் போகிறது, பேச்சுக்கள் அடிபடுகிறது என்றால் அந்த பக்கமே நான் தலை வைத்து பார்க்க மாட்டேன் என்றும் வாணி போஜன் கூறியுள்ளார்.

மலேசியா டு அம்னீஷியா என ஏற்கனவே ராதா மோகன் இயக்கிய ஓடிடி படத்தில் நடித்த வாணி போஜன் தற்போது யோகி பாபுவுடன் இட்லி சாம்பார் எனும் வெப்சீரிஸில் நடித்துள்ளார். இன்று அந்த வெப்சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே, ட்ரிப்பிள்ஸ், செங்காளம், தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட வெப்சீரிஸ்களில் இவர் நடித்திருக்கிறார். ட்ரிப்பிள்ஸ் வெப்சீரிஸில் நடிக்கும் போது நடிகர் ஜெய்யை இவர் காதலித்து வருவதாக கிசுகிசு கிளம்பியது. இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டன. இந்நிலையில், தான் எந்தவொரு நடிகருடனும் ரிலேஷன்ஷிப்பில் இல்லை என வாணி போஜன் ஓப்பனாக பேசியுள்ளார்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment