Connect with us

latest news

ஹீரோவா நடிக்கத் தயங்கிய ரஜினி… பைரவி படத்துக்கு முதல் பேரு இதுவா? என்ன ஒரு மட்டமான டேஸ்ட்..!

ரஜினியை சூப்பர்ஸ்டாருன்னு அழைக்கக் காரணமாக இருந்த படம் இதுதான்..!

சூப்பர்ஸ்டார் என்று ரஜினிகாந்துக்குப் பட்டம் கிடைக்கக் காரணமாக இருந்த படம் பைரவி. இந்தப் படத்தை இயக்கியவர் எம்.பாஸ்கர். இவர் தீர்ப்புகள் திருத்தப்படலாம், தண்டிக்கப்பட்ட நியாயங்கள், பௌர்ணமி அலைகள் போன்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குனர் இவர் தான்.

இவரது மகன் பாலாஜி பிரபு ரஜினிகாந்துடன் தனது தந்தைக்கு உண்டான அனுபவங்கள் குறித்து நினைவு கூர்கிறார். என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

அப்பா ஸ்ரீதர் சார்கிட்ட 30 படங்கள் அசோசியேட்டா வேலை பார்த்தாங்க. பைரவி படத்தை இயக்குற வாய்ப்பு அப்பாக்கு அமைந்தது. அப்போ ரஜினி சார் வில்லனா நடிச்சிக்கிட்டு இருந்தாரு.

அப்போ அந்தப் படத்துல ரஜினியை ஹீரோவா அறிமுகப்படுத்தணும். இந்தப் படத்துல யார் நடிச்சாலும் சக்சஸ் பண்ணலாம்னு நம்பிக்கையோட அப்பா இயக்குறாரு.

அதுல தான் ரஜினி சார் ஹீரோவா நடிச்சாரு. அதுல தான் ‘சூப்பர்ஸ்டார்’ங்கற பட்டமும் கிடைச்சது. படமும் நல்லா ஓடுனது. அன்று முதல் இன்று வரை ரஜினி சார் தொடர்ந்து ஹீரோவாகவே நடிச்சிக்கிட்டு வர்றாரு.

ரஜினி சார் பல பேட்டிகள்ல இந்தப் படத்தோட தயாரிப்பாளர் பேரை நிறைய வாட்டி சொல்லிருக்காரு. ஆனா இயக்குனரோட பேரை எங்கயுமே சொல்லல. அதுக்கு என்ன காரணம்னு கேட்டபோது அது என்னன்னு தெரியலன்னாரு.

அப்புறம் முதன் முதலா ஹீரோவா நடிக்க தயங்கினாரு. ஏன்னா அப்போ வில்லன் வேடத்துல நல்ல பிக்கப் ஆகி வந்தாரு. திடீர்னு ஹீரோவா நடிச்சி இருக்குற மார்க்கெட்டையும் கெடுத்துடக்கூடாதுன்னு நினைச்சாரு.

அப்புறம் அப்பா கதையை எல்லாம் சொல்லி சம்மதிக்க வச்சாரு. படத்துல ஸ்ரீபிரியா நடிக்கிறார்னு சொன்னதும் ரஜினி அவங்க ஒத்துக்கிட்டாங்களான்னு சந்தேகமா கேட்டாரு. பைரவி படத்துக்கு முதல்ல விஸ்வாசமான வேலைக்காரன்னு தான் பேரு வச்சாங்க.

அப்புறம் பைரவிங்கற பேரை செலக்ட் பண்ணினது அப்பா தான். தங்கச்சி கேரக்டர் பேரு, சாமியோட பேருன்னு சென்டிமன்ட்டா நல்லாருக்கும்னு அவரு தான் யோசிச்சி வச்சாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தைத் தயாரித்தவர் கலைப்புலி எஸ்.தாணு. அவர் கொடுத்தது தான் இந்த சூப்பர்ஸ்டார் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top