Connect with us

latest news

மீண்டும் கோகிலாவை முதலில் இயக்க இருந்தது அவரா? அடடா… சூப்பர் காம்போ எப்படி மிஸ் ஆச்சு?

1981ல் வெளியான மீண்டும் கோகிலா கமல், இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் கூட்டணியில் உருவான ஒரு வித்தியாசமான சூப்பர்ஹிட் மசாலா படம்.

உலகநாயகன் என்றதும் நமக்கு நினைவுக்கு வருபவர் கமல் தான். அவர் தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் ஏதாவது ஒரு வித்தியாசத்தைக் காட்ட வேண்டும் என்று நினைப்பார்.

வழக்கமான பாணி என்றால் அது அவருக்குப் பிடிக்காது. ஒன்று கதையிலோ, திரைக்கதையிலோ, காட்சியிலோ, பாடலிலோ, இசையிலோ, மேக்கப்பிலோ, இயக்கத்திலோ, ஒளிப்பதிவிலோ அல்லது ஒலிப்பதிவிலோ என இந்தப் புதுமை எந்த துறையில் வேண்டுமானாலும் இருக்கும்.

அவருக்கும் அதே போல புதுமைப் படைப்பவர்கள் என்றால் நல்ல நண்பர்களாகி விடுவர். அப்படித்தான் இயக்குனர் மகேந்திரனும் இருந்தார். இவர் இயக்கிய உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் படங்கள் இன்னும் எத்தனை காலம் கடந்தாலும் பேசப்படும்.

ரொம்பவும் யதார்த்தமான திரைக்கதை, நடிகர்களின் தேர்வு, அவர்கள் நடித்த விதம் என்று எல்லாமே நமக்குப் பார்க்க புதுமையாகவும், ரசிக்கத்தக்க அளவிலும் இருக்கும். இது போன்ற படங்கள் இப்போது வரவில்லையே என்ற ஏக்கம் கூட 80ஸ் குட்டீஸ்களுக்கு அவ்வப்போது வருவதுண்டு.

இயக்குனர் மகேந்திரனும், கமலும் நல்ல நண்பர்கள். இருவருமே புதுமையான, வித்தியாசமான, யதார்த்தமான திரைப்படங்களையே கொடுக்கணும்னு நினைப்பாங்க. கிட்டத்தட்ட ரெண்டு பேருக்குமே ஒரே மாதிரியான டேஸ்ட்னு தான் சொல்லணும்.

அப்படி இருக்கும்போது கமலை வைத்து மகேந்திரன் ஏன் எந்தத் திரைப்படமும் எடுக்கவில்லைன்னு நேயர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு அவர் சொன்ன பதில் ஆச்சரியமாக இருந்தது. கமலும், ஸ்ரீதேவியும் இணைந்து நடித்த மீண்டும் கோகிலா படத்தை முதலில் மகேந்திரன் தான் இயக்கப் போவதாக இருந்தது. அவர் இயக்கப் போகிறார்னு பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரம் கூட வெளியாகி விட்டது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ஒரு காலகட்டத்தில் மகேந்திரன் அந்தப் படத்தில் இருந்து விலகினார். மீண்டும் கோகிலாவை மட்டும் அவர் இயக்கி இருந்தாருன்னா நிச்சயமா பல திரைப்படங்களை இயக்கக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்து இருக்கும் என்பது தான் என்னுடைய எண்ணம் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top