Connect with us

latest news

சூர்யவம்சம் படத்துக்குப் பின்னாடி இவ்வளவு வேலைகள் நடந்துருக்கா? ‘பலே’ இயக்குனர் தான் விக்ரமன்..!

சரத்குமாருடைய திரை உலக வாழ்க்கையில் நாட்டாமை, சூர்யவம்சம் என இரு படங்களும் மெகாஹிட். இவற்றில் சூர்ய வம்சம் உருவான வரலாறு தான் இது.

இயக்குனர் விக்ரமன் சூர்ய வம்சம் படம் உருவான கதை பற்றி சுவாரசியமான தகவல்களைச் சொல்கிறார். என்னன்னு பார்ப்போமா…

பூவே உனக்காக ஹிட்டாச்சு. நிறைய தயாரிப்பாளர்கள் என்கிட்ட பேசுனாங்க. அப்போ லட்சுமி மூவி மேக்கர்ஸ்சும் பேசினாங்க. சரத்குமார் சார் டேட் எங்ககிட்ட இருக்கு. அவரை வச்சிப் படம் பண்ணுங்க. அது அவருக்கும் நல்லாருக்கும். உங்களுக்கும் நல்லாருக்கும்.

நான் அசிஸ்டண்ட் டைரக்டரா இருக்கும்போது அவருக்கு ஒர்க் பண்ணின படம் பிரிவோம் சந்திப்போம். அப்புறம் அது சிறையில் சில ராகங்கள் ஆச்சு. அது தான் அவருக்கு பர்ஸ்ட் படம். அப்போ இருந்தே அவரும் நானும் நல்ல நண்பர்களாச்சு.

அப்போ ஒரு தடவை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி சார் கூப்பிட்டாரு. என்ன பண்றீங்கன்னு கேட்டாரு. லட்சுமி மூவி மேக்கர்ஸ்ல சரத்குமாரை வச்சிப் படம் பண்ணறதுக்குக் கூப்பிட்டாங்கன்னு சொன்னேன். நான் சரத்குமாருக்கு அட்வான்ஸ் கொடுத்து வச்சிருக்கேன்.

இப்போ ரவிக்குமார் சார் படம் பண்ண வேண்டியது. அவர் அவ்வை சண்முகிக்குப் போயிட்டாரு. கமல் சாரை வச்சிப் படம் பண்றாரு. நீங்க இப்போ அந்தப் படம் பண்றீங்களான்னு கேட்டாரு. உடனே சௌத்ரி சாரே சொல்லிட்டாரு.

எப்படி மறுக்கறதுன்னு ஓகே சொன்னேன். அப்புறம் லட்சுமி மூவி மேக்கர்ஸ்கிட்டயும் சாரி சொல்லிட்டு வந்தேன். அவங்களும் நீங்க அந்தப் படத்தை முதல்ல முடிங்க. நாம அப்புறம் பார்த்துக்கலாம்னுட்டாரு. அப்போ உட்கார்ந்து கதை யோசிக்கும்போது நான் முதல்ல சொன்ன கதை வானத்தைப் போல கதை.

சரத்குமாரை வச்சி ஒரு படம் பண்ணனும்னு குற்றாலத்துல டிஸ்கஷன் பண்ணப் போகும்போது எனக்கு முதல்ல தோணுன கதை அதுதான். அந்தக் கதைக்கு சரத்குமார் செட்டாக மாட்டாருன்னு சௌத்ரி சார் சொல்லிட்டாரு. அப்புறம் ஏற்கனவே நான் அசிஸ்டண்ட் டைரக்டரா இருக்கும்போது யோசித்த கதை.

விஜயகுமார் மாதிரி ஒரு அப்பா. கார்த்திக் மாதிரி ஒரு பையன். அப்பாவுக்கு 3 பையன். அதுல கடைசி பையன் தான் கார்த்திக். இதுல கார்த்திக்கை மட்டும் பிடிக்காது. அப்புறம் அப்பாவுக்குப் பிடிக்கிற மாதிரி பையன் எப்படி ஜெயிச்சிக் காட்டுனாங்கறது தான் கதை. அந்தக் கதையை சௌத்ரி சாரும், சரத்குமார் சாரும் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க. அதுதான் சூர்யவம்சம். நினைச்ச மாதிரியே ஹிட்டாச்சு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top