Connect with us

ஒன்னுல மூணு!… பல்பு வாங்கிய விஜயா… மீண்டும் ஆரம்பித்த ஈஸ்வரி… டாட்டா காட்டிய தங்க மயில்..

latest news

ஒன்னுல மூணு!… பல்பு வாங்கிய விஜயா… மீண்டும் ஆரம்பித்த ஈஸ்வரி… டாட்டா காட்டிய தங்க மயில்..

ஆகஸ்ட் 7ந் தேதி விஜய் டிவியின் பிரபல தொடர்களின் எபிசோட்களில் நடந்த விவரம்

விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொடர்களில் இன்றைய எபிசோட்களில் என்ன நடக்க இருக்கிறது.

பாக்கியலட்சுமி தொடரில் பாக்யா பழனிசாமியிடம் வீட்டில் நடந்த விஷயங்களை கூறி வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அதற்கு அவர் ஆறுதல் சொல்கிறார். எழில் படம் நடக்காமல் போன விஷயத்தை ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரிடம் சொல்லி வருத்தப்படுகிறார். ஈஸ்வரி முதலில் குழந்தையை பெற்றுக்கொண்டு செட்டில் ஆக சொல்கிறார்.

இதனால் எழில் கோபமாக எழுந்து சென்றுவிட அமிர்தா அவரிடம் வந்து பேசுகிறார். குழந்தை பெற்றுக்கொள்ளலாமா எனக்கு ஏற்க எழில் அவரை சமாதானம் செய்கிறார். பின்னர் கோபி மற்றும் செந்தில் இருவரும் குடித்துக்கொண்டிருக்கின்றனர். அங்கு பாக்யா ஹோட்டலின் ஓனரை சந்திக்கின்றனர்.

சிறகடிக்க ஆசை தொடரில் சீதா முதல் வகுப்பில் பாஸான விஷயத்தை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி மீனா மற்றும் முத்து இருவரும் சந்தோஷப்பட்டுக் கொள்கின்றனர். ஆனால் விஜயா நக்கலாக பேசுகிறார். அப்போ அங்கு வரும் ஸ்ருதி சீதா விஷயம் கேட்டு சந்தோஷப்படுகின்றார். விஜயாவிடம் நீங்களும் டிகிரி முடிச்சிருந்தால் தான் அந்த சந்தோஷம் உங்களுக்கு புரியும் என பல்ப் கொடுக்கிறார்.

இதைத்தொடர்ந்து கோயிலுக்கு வரும் மீனா மற்றும் முத்து சீதாவிடம் இணைந்து போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். பின்னர் மனோஜ் கடையில் ரோகினி கணக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார். 30 ஆயிரம் ரூபாய்க்கு மாதம் சாப்பிடுவதைக் கேட்டு ஷாக் ஆகிறார். அந்த நேரத்தில் பேங்கில் இருந்து வந்தவர் கிரெடிட் கார்டை மனோஜ்க்கு கொடுக்கிறார். அதன் லிமிட் 10 லட்சம் என கூற வாயை பிளக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் செந்தில் மீனாவின் தந்தையிடம் சபதம் போட்டுக் கொண்டிருக்கிறார். அதை கதிர் வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறார். பின்னர் வீட்டில் மீனா மட்டும் ராஜீவ் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது வரும் கதிர் மீனாவிடம் அந்த வீடியோவை காட்ட அவர் கண் கலங்குகிறார்.

பின்னர் தங்கமயில் மற்றும் சரவணன் இருவரும் சென்னைக்கு கிளம்புகின்றனர். தங்க மயிலின் அம்மா வந்து இனி உன் புருஷன் உன்னை மட்டுமே யோசிக்கணும் என அவருக்கு அறிவுரை வழங்கி செல்கிறார். பாண்டியன் செலவுக்கு ஐந்தாயிரத்தைக் கொடுக்க வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சியாகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top