Connect with us

Cinema News

ரமேஷ் கண்ணாவை துரத்தியடித்த ரவிகுமார்… பதறிய ஜெமினி கணேசன்… சட்டை செய்யாத கமல்

கே.எஸ்.ரவிகுமாருடன் பயங்கரமாக ரகளை செய்த ரமேஷ்கண்ணாவைப் பார்த்து பதறி அடித்தார் ஜெமினிகணேசன். கமலோ அப்படி சொன்னார். இது எந்தப் படத்துல தெரியுமா?

கே.எஸ்.ரவிகுமார் சாரிடம் முதன் முதலாக டிஸ்கஷனுக்கு விவேக் தான் அறிமுகப்படுத்தினார். அசிஸ்டண்ட் டைரக்டராக இருந்த போது அவரிடம் டிஸ்கஷன் பண்ணும்போது என்னோடது கரெக்டா இருக்குன்னு சொல்வாரு. அவர் அசிஸ்டண்டுகளிடம் நாளைக்கு நல்ல லவ் சீன் ஒண்ணு யோசித்து ரெடி பண்ணிட்டு வாங்கன்னு சொல்வாரு.

நான் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டேன். இதை விட்டா என் வேலையைப் பார்க்கப் போயிடுவேன். அப்புறம் மறுநாள் வரும் போது யார் யார் என்னென்ன ரெடி பண்ணிட்டு வந்தீங்கன்னு கேட்பாரு. சேரன் பாண்டியன் டிஸ்கஷன்ல அப்படித்தான் நடந்தது. எங்கிட்ட கேட்பாரு. ‘நான் கடைசில சொல்றேன் சார்’னு சொல்லிடுவேன்.

அப்படி ஒவ்வொருவரிடமும் கேட்பார். சேரனிடமும் கேட்பார். எல்லாரும் ஒண்ணு ஒண்ணு சொல்வாங்க. கடைசியா அவங்க சொன்னதை வச்சி எனக்கு ஒரு ஐடியா வரும். நான் சொல்வேன். கடைசில நான் சொன்னது அவருக்கு பெட்டரா தெரியும்.

அதுல இருந்து அவர் டிஸ்கஷன் சொன்ன உடனே என்னைக் கேக்க மாட்டாரு. ‘நீ எல்லாம் சொன்னதை வச்சி அடிப்பே… எனக்குத் தெரியும். அமைதியா இரு. அவங்ககிட்ட கேட்டுட்டு வர்ரேன்’னு சொல்வாரு. அவ்வைசண்முகியில் கமல் வேலைக்காரியா உள்ளே வந்ததும் மற்ற வேலைக்காரங்க எல்லாம் வெளியே போயிடுவாங்க.

அவங்கள்ல இடிச்சபுளி செல்வராஜ், இளங்கோவன்னு இருப்பாங்க. ‘எதுக்கு இந்த சீனை எடுக்குறீங்க’ன்னு கேட்டேன். ‘அவ்வை சண்முகி உள்ளே வந்துட்டாடா. அப்புறம் வேலைக்காரங்கள எல்லாம் எங்கேன்னு ஜனங்க கேட்பாங்க இல்ல’. ‘இடிச்சபுளி செல்வராஜ், இளங்கோவன் இவங்கள எல்லாம் யார் சார் கேட்கப்போறா… கமல், டெல்லிகணேஷ், ஜெமினிகணேசன் இருக்காரு. இத்தனை பேரு இருக்கும்போது அவங்களை யார் சார் கேட்பா? லாஜிக்கை எல்லாம் கேட்க மாட்டாங்க சார். டேட் இல்ல சார்’னு சொன்னேன்.

‘டேய் நீ யார்றா கேட்குறதுக்கு. நீ டைரக்டரா, நான் டைரக்டரா?’ ‘நீங்க டைரக்டரா இருக்கலாம். ஆனா டப்பிங் தியேட்டரைப் புக் பண்ணியிருக்கேன். நாளைக்கு போச்சுன்ன என்ன தான் கேட்பீங்க’ன்னு சொன்னேன். பெரிய தகராறு நடக்கு. அடிக்க ஓடி வர்றாரு.

அதை ஜெமினிகணேசன் பார்த்துட்டாரு. ‘கமல் கமல், அங்க பாருங்க சண்டையை. நாளைக்கு சூட்டிங் நடக்குமா..?’ன்னு கேட்டாரு. ‘நீங்க வேலையைப் பாருங்க. அவங்க அப்பத்தான். நாம நம்ம வேலையைப் பார்ப்போம்’னாரு. அந்த அளவுக்கு டைரக்டர் சார் கூட நல்ல அன்டர்ஸ்டேன்டிங். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top