இதனால் இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன்.. மனம் திறந்த சீரியல் நடிகை ஸ்ருத்திகா…

Published on: August 8, 2024
---Advertisement---

சன் டிவி நாதஸ்வரம் சீரியலில் நாயகியாக நடித்த ஸ்ருத்திகா சமீபத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ஆரியனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்து ஸ்ருத்திகா மனம் திறந்து பேசி இருக்கிறார்.

திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் நாதஸ்வரம். இதில் அவரின் ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஸ்ருத்திகா. தொடர்ந்து திருமுருகன் இயக்கத்தில் பல சீரியலில் நடித்திருக்கிறார். இருவருக்கும் காதல் எனக் கிசுகிசுக்கப்பட்டாலும் இவர் 2019 ஆம் ஆண்டு சனேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கோலங்காலமாக இவர்கள் திருமணம் நடந்து முடிந்தது. பின்னரும் நடிகை ஸ்ருத்திகா சீரியலில் பிஸியாக நடித்து வந்தார். கல்யாண பரிசு, அழகு, மகராசி, வைதேகி, உறவுகள் சங்கமம், முகூர்த்தம், கலசம், கோகுலத்தில் சீதை, உயிர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் தன்னுடன் மகராசி சீரியலில் நாயகனாக நடித்த ஆரியனை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் முதலில் காதலிக்கின்றனர் என ரசிகர்கள் கிசுகிசுத்தாலும் அது குறித்து பேசாமல் இருந்தவர்கள் திடீரென தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டனர். தற்போது இந்த திருமணம் குறித்து ஸ்ருத்திகா மனம் திறந்து இருக்கிறார்.

என்னுடைய முதல் கணவர் சனேஷ் ரொம்ப நல்ல மனிதர். ஆனால் அவருக்கும் எனக்குமான திருமண உறவு நிறைய மன சங்கடத்தில் முடிந்தது. எங்கள் இருவருக்கும் ஒத்துப் போகவில்லை. என்னுடைய பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் என்றாலும் நிறைய ஏமாற்றங்களை அதில் சந்தித்தேன். அவரை குறை சொல்ல நான் விரும்பவில்லை.

அதுபோலவே ஆரியனின் முதல் திருமணத்திலும் அவர் மனைவியுடன் இதே பிரச்சனை இருந்தது. பல பிரச்சினைகள் வந்த போதும் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க தான் நான் முயற்சி செய்தேன். ஆனால் அது கடைசிவரையும் ஒத்துப் போகவில்லை. அப்போதுதான் எங்கள் பெற்றோர் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமே என அறிவுரை செய்திருந்தனர்.

அதைத்தொடர்ந்தே நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக ஸ்ருத்திகா தெரிவித்திருக்கிறார். நடிகர் ஆரியனின் முதல் மனைவியும், நடிகையுமான நிவேதா தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் சுரேந்தரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment