எனக்கு ஒரு ரோல் வேணும்… வெட்கமே இல்லாம கேட்டு வாங்குன… மனுஷன இப்படி கெஞ்ச விட்டுட்டீங்களே..?

Published on: August 8, 2024
---Advertisement---

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக வளம் வருபவர் தனுஷ். தற்போது ராயன் திரைப்படத்தின் மூலமாக ஒரு முன்னணி இயக்குனர் என்ற இடத்தையும் பிடித்து விட்டார். தொடர்ந்து படங்களில் ஹீரோவாக கலக்கி வந்த இவர் பின்னர் தயாரிப்பாளராக, இசையமைப்பாளராக, பாடகராக மாறினார்.

அதைத்தொடர்ந்து இவருக்கு இயக்குனராக வேண்டும் என்ற ஆசை தோன்ற பவர் பாண்டி என்கின்ற வித்தியாசமான திரைப்படத்தை கொடுத்து இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்தது. பின்னர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த தனுஷ் ராயன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் இவரின் 50வது திரைப்படம். இதனால் இப்படத்தை தானே இயக்கி நடித்தும் இருந்தார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். மேலும் தனுசுடன் இணைந்து சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, எஸ் ஜே சூர்யா, செல்வ ராகவன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான நாள் முதலே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகின்றது. விமர்சனங்களில் மட்டுமல்லாமல் வசூலிலும் சாதனை படைத்து வருகின்றது. இதனால் தனுஷ் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றார். தனுஷின் அண்ணன் செல்வராகவன். இவர் ஒரு பிரபல இயக்குனர். இவரது திரைப்படங்கள் என்றாலே அது சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும்.

அப்படிப்பட்ட இயக்குனர் தற்போது இயக்கத்தில் இருந்து சற்று பிரேக் எடுத்துக்கொண்டு திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் ராயன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றதை பார்த்த செல்வராகவன் தம்பி தனுஷ் குறித்து பெருமைப்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் ராயன் திரைப்படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். இந்த திரைப்படம் குறித்த ஸ்கிரிப்ட் எனக்கு முன்பே தெரியும். மிக சிறப்பான கதை. இந்த கதையை படமாக்க தனுஷ் முடிவு செய்த பிறகு எனக்கு ஏதாவது கதாபாத்திரம் கொடுப்பாரா என்று காத்திருந்தேன். பின்னர் வெட்கத்தை விட்டு நானே கேட்டு விட்டேன். ராயன்-ல எனக்கு ஒரு ரோல் கொடு தனுஷ் என்று வெட்கமே இல்லாம கேட்டு வாங்கினேன் என அந்த பேட்டியில் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment