
latest news
கேப்டனுக்கு மட்டும் சூப்பர் படமா? அதில் நானும் நடிப்பேன்… ரீமேக்கில் நடித்த ரஜினிகாந்த்!…
Published on
By
தமிழில் மிரட்டலான ஒரு திரைக்கதை அமைந்து, அதன்மூலம் மிகப்பெரிய வெற்றியடைந்த கேப்டன் விஜயகாந்தின் ஒரு படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பின்னாட்களில் ரீமேக் பண்ணி நடித்திருந்தார். அந்தப் படம் எதுவென்று தெரியுமா?
தமிழ் சினிமாவில் விஜயகாந்தும் ரஜினிகாந்தும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் அறிமுகமாகி வளரத் தொடங்கியவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் விஜயகாந்துக்கு முதன்முதலில் ஹிட்டாக அமைந்த படம் 1980-ம் ஆண்டு வெளியான தூரத்து இடிமுழக்கம்.
இதையும் படிங்க: ‘தங்கலான்’ படத்தை சத்தியமா பார்க்க மாட்டேன்! படமா எடுக்குறானுங்க? இவரே இப்படி சொல்லலாமா?
அதேநேரம், விஜயகாந்த் அறிமுகமாவதற்கு முன்பு தமிழ் சினிமாவில் அபூர்வ ராகங்கள் மூலம் ரஜினிகாந்த் என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு 1978-ம் ஆண்டு ரிலீஸான பைரவி படம் மூலமா ஹீரோவாக வளர்ந்திருந்தார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் அப்போது பிரபலமாக இருந்த கோபக்கார இளைஞர் கதாபாத்திரத்துக்கு விஜயகாந்த் – ரஜினி என இருவருமே பக்காவாகப் பொருந்திப் போனார்கள்.
அதேபோல், கதாநாயகன் என்றாலே நல்ல நிறமாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தையும் மொத்தமாக உடைத்தெறிந்தார்கள் கேப்டனும் சூப்பர் ஸ்டாரும். ரஜினிகாந்துக்கு எப்படி கே.பாலச்சந்தரோ அப்படித்தான் விஜயகாந்துக்கு எஸ்.ஏ.சந்திரசேகரன். எஸ்.ஏ.சி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து இரண்டு பேருக்கும் மிகப்பெரிய ஹிட்டா அமைந்த படம்தான் `சட்டம் ஒரு இருட்டறை’.
இந்தப் படம்தான் இயக்குநராக எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கும் நடிகராக விஜயகாந்துக்கும் முதல் வெற்றியைக் கொடுத்த படம். சட்ட நுணுக்கங்களோடு எழுதப்பட்ட திரைக்கதை படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கியமான காரணம். இந்தப் படத்தை இந்தியில் டி.ராமராவ் இயக்கத்தில் அந்தா கானூன் என்கிற பெயரில் எடுத்தார்கள். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் ஹீரோ.
இதையும் படிங்க: நாங்க பெருசா பண்ணிட்டு இருக்கோம்… கோட் தயாரிப்பாளர் போஸ்டால் எக்ஸ் தளமே சூடா இருக்கே!..
தமிழில் விஜய் என்கிற கேரக்டரில் விஜயகாந்த் நடித்திருந்த கேரக்டரை இந்தியில் விஜய்குமார் சிங் என்கிற பெயரில் ரஜினி ஏற்று நடித்திருந்தார். ஹேமமாலினி, ரீனா ராய், அம்ரீஷ் பூரி என பெரிய நட்சத்திர பட்டாளமே அவருடன் அந்தப் படத்தில் நடித்திருந்தார்கள்.
Nayanthara: கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் மக்கள்...
TVK Vijay: கடந்த 27ம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய...
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கடந்த 27ம் தேதி மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அங்கு...
Karur: தவெக தலைவரும் நடிகருமான விஜய் கடந்த 27ம் தேதி தேர்தல் பரப்புரைக்காக கரூர் சென்றிருந்தார். மதியம் 12:3 மணிக்கு வருவார்...
STR49: சினிமாத்துறை என்றாலே எல்லாவற்றுக்கும் அடிப்படை வாய்ப்புதான். ஒரு நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், உதவி இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என யாராக...