அந்தகன் படத்துல என்ன பண்ணி வச்சிருக்கீங்க நவரச நாயகனை…? பொங்கி எழும் பிரபலம்…!

Published on: August 14, 2024
karthick
---Advertisement---

நவரச நாயகன் கார்த்திக் எப்படி வீழ்ந்தார் என்று பார்ப்போம். கார்த்திக் என்று சொன்னதும் அந்த துருதுருவென நடிக்கும் நடிப்பு தான் நமது நினைவுக்கு வரும். எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அச்சு அசலாகப் பொருந்தி விடுவார். இயல்பிலேயே அவர் இப்படிப்பட்டவர். அவரது அப்பா முத்துராமனும் மிகச்சிறந்த நடிகர்.

திரைத்துறையில் அவரது நடிப்பு எல்லாரையும் ஈர்த்தது. அலைகள் ஓய்வதில்லை இசைஞானியோட சொந்தப்படம். பாரதிராஜா இயக்கத்தில் கார்த்திக் நடித்த முதல் படம். அது பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

இந்தப் படம் நடிக்கும்போது முத்துராமன் இருக்கிறார். ஆனால் படம் வெளியானபோது அவர் இல்லை. தன்னோட மகனின் நடிப்பை அவரால் பார்க்க முடியவில்லை. அதன்பிறகு அவருக்குப் பெரிதும் கைகொடுத்த படம் மௌனராகம். 15 நமிடமே வந்தாலும் பட்டையைக் கிளப்பி இருப்பார். 90களின் காலகட்டத்தில் சம்பளம் சரி பண்ணின 7 நடிகர்களில் ஒருவராக கார்த்திக் இருந்தார்.

அக்னி நட்சத்திரம் படத்தில் பிரபுவுடன் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார். இவருக்கு ரசிகைகள் அதிகம். கிராமியப்படங்களில் பாண்டி நாட்டுத்தங்கம், பெரிய வீட்டுப்பண்ணக்காரன் படங்கள் எல்லாம் சூப்பர்ஹிட். இதுல மப்ளர் போட்டு நடித்திருப்பார். இதைப் பார்த்து விட்டு ஏகப்பட்ட ரசிகர்கள் மப்ளர் போட்டு அலைந்தார்கள்.

கிழக்கு வாசல், பொன்னுமணி படங்கள் எல்லாம் கார்த்திக் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். உள்ளத்தை அள்ளித்தா இதுல வித்தியாசமான கார்த்திக். மேட்டுக்குடியும் அப்படித்தான். கார்த்திக் நடித்தாலே வெற்றி தான் என்று இருந்தது. அமரன் படத்தில் கானா பாடல் ஒன்றையும் சொந்தக்குரலில் பாடி அசத்தியிருப்பார். அவருடைய படங்களில் பாடல்கள் எல்லாமே பிரபலம். அதற்குக் காரணம் இளையராஜா.

திடீர்னு சினிமா வாய்ப்பு குறையும்போது அரசியல் மோகம் வர கட்சியில் இருந்தார். ஆனால் அதிலும் அவர் சோபிக்கவில்லை. காணாமல் போனார். இவர் 20 வருஷம் கூட நடிக்கல. கார்த்திக் திடீர்னு பெரிய பின்னடைவை சந்திக்க என்ன காரணம்? சூட்டிங்கில் காலதாமதம் தான் முக்கிய காரணம். அவர் லேட்டா வந்தாலும் சீக்கிரமாக நடித்துக் கொடுத்து விடுவாராம். அதனால் தான் அவர் ஹீரோவா பல வருடங்கள் தாக்குப்பிடித்தாராம்.

Andhagan
Andhagan

அந்தகன் படத்தில் 3 காட்சிகள் தான் நடித்து இருக்கிறார். கார்த்திக் இவ்வளவு கேவலமான பாத்திரத்துல நடிக்கணுமா? தியாகராஜனுக்காக நடித்தாரா? ஏன் இந்தப் படத்துல அவர் நடிச்சாரு. சின்ன வயசுல நாம ரசிச்சிப் பார்த்த கார்த்திக் சுயநினைவோடு தான் இந்தப் படத்துல நடிச்சாரா? பிரசாந்துக்காக நடிச்சாரா? இந்தப் படத்துல கெஸ்ட் ரோல் கூட இல்ல.

நடிகராகவே வருவார். மீசை இல்லாம, வயசான கெட்டப்புல வர்றாரு. கார்த்திக்கை இந்தப் படத்துல குழிதோண்டி உசுரோடப் புதைச்சிருக்காங்க. படத்துல கார்த்திக் ஏன் சிம்ரனைக் கல்யாணம் பண்ணினாருன்னு கேள்வி வருது. கார்த்திக்காவே படத்துல வரும்போது இன்னொரு மனைவி ஏன் சம்பந்தமில்லாம வர்றாங்க?

கார்த்திக் மனைவியான சிம்ரனுக்கும், சமுத்திரக்கனிக்கும் கள்ளத்தொடர்பு. இதுல அவர் சுடுறாரு. அதுல கார்;த்திக் இறந்துடுறாரு. ஆகச்சிறந்த நடிகரை ஏன் இப்படி கேவலப்படுத்துனாங்கன்னு தெரியல. தியாகராஜன் என்ன அறிவோடு எடுத்தார்? பிரசாந்த் என்ன அறிவோடு நடிச்சார்? மேற்கண்ட தகவல்களைப் பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.