விஜயகாந்தோட சரிவுக்குக் காரணமே அதுதானாம்… லியாகத் அலிகான் சொன்ன அந்தத் தகவல்

Published on: August 14, 2024
vijayakanth
---Advertisement---

கேப்டன் விஜயகாந்த் படங்களில் கனல் தெறிக்கும் வசனங்களை எழுதியவர் லியாகத் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தைப் பார்த்தால் தெரியும். அவர் விஜயகாந்தின் வாழ்க்கையில் ஏற்பட்ட சரிவுக்கு என்ன காரணம் என்று தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

எங்க பிளான் என்னன்னா விஜயகாந்த் திடீர்னு அரசியலுக்கு வரல. இதைத் திட்டமிட்டு உருவாக்குனோம். இப்ராகிம் ராவுத்தரும், நானும் எதிர்காலத்துல அரசியலுக்கு வரணும்னு சொல்லியே அவரை நடிக்க வச்சோம். ூந்தோட்டக்காவல்காரன் படத்திலேயே விஜயகாந்த் பற்றி ஒரு வசனம் வரும். அதுல எஸ்எஸ்.சந்திரன் எம்எல்ஏ., நம்பியார் போலீஸ் ஆபீசர். அப்போ எஸ்எஸ்.சந்திரன் கேட்பாரு.

‘என்னய்யா நீ விஜயகாந்துக்கே சப்போர்ட் பண்ற’ன்னு. நீங்க எம்எல்ஏவாக இருந்து பண்ணாத நல்ல காரியத்தை எல்லாம் அவர் எம்எல்ஏ.வா இல்லாமலேயே பண்ணிக்கிட்டு இருக்காரு’ன்னு சொல்வாரு நம்பியார். அதே மாதிரி உளவுத்துறை, ஏழை ஜாதி படங்களிலும் அரசியல் வசனங்கள் வரும். இதுக்கு முன்னாடி உங்களைத் தம்பின்னு கூப்பிட்டோம். இனி தலைவர்னு கூப்பிடுவோம்னு சொல்வாங்க.

Yelai jaathi
Yelai jaathi

அரசியலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து ஜெயித்தபோது தேமுதிகவால தான் ஜெயலலிதாவால ஜெயிக்க முடிஞ்சதுன்னு யாரு சொன்னான்னு தெரியல. அது தெரிஞ்சதும் ஜெயலலிதாவுக்கப் பயங்கரமா கோபம் வந்துடுச்சு. அன்னைக்கு இருந்த நிலைமையில கூட்டணி இல்லாமலேயே ஜெயிக்க முடியும்னு நினைச்சாங்க.

இப்படி கோபம் வந்ததும் கூட்டணி 100 நாள்லயே பிரிஞ்ச மாதிரி ஆயிடுச்சு. அதைப் பத்திப் பேசப் பேச சட்டசபையில விஜயகாந்த் கோபப்பட ஆரம்பிச்சிட்டாரு. அங்கேயும் நாக்கைத் துருத்தி மரபை மீறிப் பேச ஆரம்பிச்சிட்டாரு. அந்த சம்பவம் தான் அவரோட சரிவுக்குக் காரணமாயிடுச்சு.

அப்புறம் விஜயகாந்தோட முன்கோபம் தான் அவரோட மைனஸ் பாயிண்ட் ஆகிடுது. இதை வச்சே பத்திரிகைகாரங்க ட்ரோல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அதே நேரத்துல ஜெயலலிதாவும் அதைப் பெரிய விஷயமாக்க கடைசியில் விஜயகாந்த் எதிர்க்கட்சித்தலைவராகிறார். இனிமே உங்களுக்க ஏறுமுகம் அல்ல. இறங்குமுகம் தான்னு சொல்ல… அதன்படியே நடந்தது. அவங்க நினைச்சதை சாதிச்சிட்டாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.