நல்லவேள நடக்கலை… தங்கலான் அராத்தி கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா?

Published on: August 16, 2024
---Advertisement---

Malavika: தங்கலான் படத்தில் முதலில் அராத்தி கேரக்டரில் மாளவிகா மோகனனுக்கு பதில் பிரபல நடிகை ஒருவரை தான் ரஞ்சித் அணுகினாராம். ஆனால் அது நடக்காமல் போனதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

துல்கர் சல்மானுடன் இணைந்து மலையாள படத்தில் தன்னுடைய நடிகை அவதாரத்தை எடுத்தவர் மாளவிகா மோகனன். அப்புறம் அவருக்கு சரியான வரவேற்பை கொடுக்க தொடர்ந்து வாய்ப்புகள் அமைந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் வரத் தொடங்கியது.

இதையும் படிங்க: சான்ஸே இல்ல… அந்த விஷயத்துல விக்ரம் மாதிரி ஒரு நடிகரை பார்க்கவே முடியாதாம்..!

பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார் மாளவிகா மோகனன். அப்புறம் முக்கிய ரோல் இல்லை என்றாலும் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து கோலிவுட் தனக்கான இடத்தை பிடித்தார்.

தொடர்ந்து கதை தேர்வில் கவனம் செலுத்தி வரும் மாளவிகா மோகனன். நேற்று விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் முக்கிய இடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கி இருக்கிறார். பொதுவாக சின்ன ரோலில் வந்து காணாமல் போகும் மாளவிகா இப்படத்தில் அராத்தி என்ற கேரக்டரில் வலுவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க: நடிகை விஷயத்தில் கமல் செய்த தவறு!.. விக்ரம் படம் பிளாப் ஆனதுக்கு காரணமே அதுதான்!…

மாளவிகாவிற்குள் இப்படி ஒரு முரட்டுத்தனமான நடிகை இருக்கிறாரா என ரசிகர்களே சந்தேகம் கொள்ளும் அளவுக்கு நடிப்பில் மிரட்டி இருக்கிறார். இந்நிலையில் இந்த கேரக்டருக்கு முதலில் மாளவிகா தேர்வாகவில்லை. நடிகை ராஷ்மிகா மந்தனாவை தான் நடிக்க வைக்க ரஞ்சித் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

ஆனால், சமயத்தில் ராஷ்மிகாவின் கால்ஷீட் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரால் தங்கலான் படத்திற்கு தேதிகள் ஒதுக்க முடியாத நிலை உருவானது. இதைத்தொடர்ந்தே அராத்தி கேரக்டருக்குள் மாளவிகா மோகனனை படக்குழு நடிக்க வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.