Connect with us
GGva

Cinema News

கங்குவா டிரெய்லரை இப்பவே விட்டதன் மர்மம்… அடேங்கப்பா எவ்ளோ பெரிய செக்கை வச்சிருக்காங்க..!

கங்குவா டிரெய்லரை கோட் படம் வெளியிடும் திரையரங்குகளில் வெளியிட கேட்டுக்கொண்டுள்ளார்களாம். கங்குவா படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்குறதுக்கு பெரிய வித்தையை இந்தப் படத்தில் கொண்டு வந்துள்ளார்கள். அதனால் தான் டிரைலரை இவ்வளவு சீக்கிரமாகக் கொண்டு வந்துருக்காங்க என்கிறார் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு. வேறு என்னென்ன சொல்கிறார் என்று பார்ப்போமா…

ஒரு காலத்தில் விஜய், சூர்யா இருவரும் நண்பர்களாக இருந்தனர். சூர்யா நேருக்கு நேர் படத்துல நடிக்கும்போது நிறைய வாட்டி தைரியம் கொடுத்தவர் விஜய் தானாம். அதன்பிறகு இவர்கள் போட்டியாளர்களாக மாறினார்கள் என்பது தான் பெரிய விஷயம். சூர்யா படம் விஜய் படத்துடன் கிட்டத்தட்ட 23 தடவை மோதியிருக்கிறது. வேலாயுதமும், ஏழாம் அறிவும் படமும் அதுல முக்கியமான மோதல்.

velayutham 7m arivu

velayutham 7m arivu

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் படம் வேலாயுதம். அப்போ தான் விஜய் கொடி அறிமுகம். லட்சக்கணக்கான பேர் திரண்டு வந்தாங்க. அதே மாதிரி ஏழாம் அறிவுக்கு அளவுக்கதிகமான கூட்டம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், சூர்யான்னு கூட்டம் அலைமோதியது.

கமர்ஷியலா வேலாயுதம் ஹிட். இதுதான் மினிமம் பட்ஜெட். நல்ல வசூல். ஏழாம் அறிவும் மிகச்சிறந்த படம் தான். ஒரு கட்டத்துல ரசிகர்களைத் தாண்டி இருவருக்கும் இடையே போட்டி வந்துவிட்டது. கங்குவா 350 கோடியில எடுத்தாச்சு. அந்த டிரைலரை கோட் படம் போடும் போது இன்டர்வல் பிளாக்ல போட்டே ஆகணும்னு சொல்றாங்க.

இந்திய அளவில் டுவிட்டர்ல அதிகம் தேடப்பட்ட நபர் விஜய். 2020ல் அப்படி நடந்ததாம். அடுத்த இடம் சூர்யா படம் சூரரைப்போற்று பிடித்து விட்டது. அந்தநிலையில் விஜயே ஒரு அறிக்கை விட்டார். சோசியல் மீடியாவுல ரசிகர்கள் மோத வேண்டாம் என்று.

இப்போது சூர்யா, விஜய், அஜீத் என எல்லாரும் அவரவர் வேலையைப் பார்த்து வருகின்றனர். விஜய் அரசியலுக்குப் போக உள்ளதால் சிவகார்த்திகேயன், சிம்பு, தனுஷ் பயன்படுத்துவார்களா? அல்லது இவங்களுக்கு எல்லாம் தாதாவா சூர்யா வந்து நிப்பாரா?

கோட் படத்துக்கு இது பெரிய உதவியா இருக்கும். ஏஜிஎஸ் நிறுவனத்துக்கிட்டேயே கேட்கிறோம். இந்த டிரைலரை கோட் படத்து தியேட்;டர்ல போடுங்கன்னு கேட்குறோம் என்று சொல்வது சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top