‘கோட்’ டிரெய்லரால் வெறியான மகிழ்திருமேனி! ‘விடாமுயற்சி’யில் அப்போ வெறித்தனம் இருக்கு

Published on: August 18, 2024
vijay
---Advertisement---

Goat Movie: விஜய்  நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் கோட். இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி உள்ளது.

எனவே கோட் படத்தின் போஸ்டர், மூன்று பாடல்கள் வெளியாகி விஜய் ரசிகர்களையே வருத்தம் அடைய வைத்த நிலையில் அதற்கு பதிலடியாக இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: மணிரத்னம் படத்துக்கு ‘நோ’ சொன்ன மோகன்… விஷயம் இப்ப தானே வெளிய தெரியுது..!

ஏற்கனவே கோட் படத்தின் டிரைலரை நாங்கள் வெறித்தனமாக தயாராக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற வகையில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறி இருந்தார்.

அவர் சொன்னதைப் போலவே ட்ரைலர் அமைந்துள்ளது. இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கும் இந்த படத்தில் சினேஹா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் ஜோடியாக நடித்திருக்கின்றனர். இவர்களுடன் லைலா ,பிரசாந்த், பிரபு தேவா,மோகன் போன்ற பிரபலங்களும் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க; பா.ரஞ்சித்துக்கு வரலாறு தெரியுமா? தெரியாதா? தங்கலானை இப்படியா எடுப்பாரு…!

படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாக இருக்கின்றது. இந்த நிலையில் படத்தைப் பற்றி அதனுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் வெங்கட் பிரபு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

ajith
ajith

கோட் படத்தின் டிரைலரை அஜித்திடம் காட்டியதாகவும் அதை பார்த்து அஜித் மிகவும் சந்தோஷப்பட்டதாகவும் விஜய்க்கும் படக்குழுவுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை கூறியதாகவும் வெங்கட் பிரபு கூறினார்.

இதையும் படிங்க: பா.ரஞ்சித்துக்கு வரலாறு தெரியுமா? தெரியாதா? தங்கலானை இப்படியா எடுப்பாரு…!

இந்த நிலையில் கோட் படத்தின் டிரைலர் வெளியானதும் பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி ‘நம்ம ட்ரெய்லர் பட்டாசாக இருக்கப் போகுது .கவலைப்படாதீர்கள்’ என விடா முயற்சி படத்தின் டிரைலரைப் பற்றி அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.