Connect with us
vikram

Cinema History

பேருக்காகவே சீயான் நடிச்சாரா? விக்ரமுக்கு வேற லெவல் ஹிட் இதுதான்!

2002ல் சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த மாஸான படம் ஜெமினி. இதில் விக்ரமுடன் கலாபவன்மணி, கிரண் உள்பட பலர் நடித்து இருந்தனர். நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. பரத்வாஜ் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் உருவானது எப்படின்னு பார்ப்போமா…

அடுத்த படத்துக்கு யாரை கதாநாயகனா போடலாம்கற விவாதம் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்துகிட்டு இருந்தது. அப்போது கலந்து கொண்டவர்களில் ஏவிஎம் படங்களைத் தொடர்ந்து விநியோகிப்பவரும், ஏவிஎம் சரவணனின் நெருங்கிய நண்பருமான ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷூம் ஒருவர்.

யாரைக் கதாநாயகனா போடலாம்னு யோசிக்கும்போது விக்ரமைக் கதாநாயகனா போட்டு நீங்க ஏன் ஒரு படத்தை எடுக்கக்கூடாது? அவர் நடிக்கிற படங்கள் எல்லாம் மிகச்சிறப்பா ஓடுது. அவரும் நல்லா நடிக்கிறார் என்றார் ஆனந்தா பிக்சர் சுரேஷ்.

அவர் சொன்ன யோசனை நல்ல யோசனையா தெரியுதுன்னு உடனடியா விக்ரமைத் தொடர்பு கொண்டார் ஏவிஎம்.சரவணன். அவரும் மறுபேச்சின்றி நிறுவனத்திடம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அப்போது யாரை இயக்குனரா போடலாம்னு பேசும்போது அங்கிருந்த பத்திரிகைத் தொடர்பாளர் பெருந்துளசி பழனிவேல் இயக்குனர் சரணைப் போடலாம்.

Gemini

Gemini

அவர் சமீபகாலத்தில் எடுத்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய வெற்றிப்படங்கள் என்றார். உடனே அவரை அழைத்துப் பேசும்போது அவர் சில நிபந்தனைகளோடு படம் இயக்க ஒப்புக்கொண்டார். அடுத்து அவர் சொன்ன கதையும் சரவணனுக்கு ரொம்பவே பிடித்து விட்டது.

பேரு என்ன வைக்கலாம் என யோசிக்கும்போது பல பேர்கள் சொன்னாங்க. ஆனா அதுல எதுவுமே ஏவிஎம்.சரவணனுக்குத் திருப்தி இல்லை. கேட்ட உடனே கேச்சா இருக்கணும்னு நினைச்சார். உடனே ஜெமினின்னு சரண் சொன்னார். ஏவிஎம்.சரவணனுக்குப் பேரு பிடித்து இருந்தாலும் நாலு பேருக்கிட்ட கலந்து ஆலோசிக்காம முடிவு எடுக்க மாட்டாரு.

அதனால தெரிந்த விநியோகஸ்தருக்கு எல்லாம் போன் பண்ணி இப்படி ஒரு பேரு வைக்கலாம்னு இருக்கோம்னு அபிப்ராயம் கேட்டார். அதுக்கு எல்லாருமே இப்படி ஒரே பேருல ரெண்டு ஸ்டூடியோக்கள் வந்தது இல்ல. அதனால இந்தப் பேரு நல்லாருக்குன்னு எல்லாருமே சொன்னாங்க. அப்படித்தான் ஜெமினி படம் உருவானது.

மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

 

 

google news
Continue Reading

More in Cinema History

To Top