‘கோட்’ படத்தில் அந்த நாலு பேருக்கு லீடர் இவரா? சத்தியமா கேப்டன் இல்லங்க

Published on: August 19, 2024
goat
---Advertisement---

Goat Movie: ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படமாக இப்போது கோட் திரைப்படம் இருக்கிறது. படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. சமீபத்தில்தான் படத்தின் டிரெய்லர் வெளியாகி கிட்டத்தட்ட 40 மில்லியன் வியூவ்ஸ்களை கடந்து சென்றிருக்கிறது. அந்தளவுக்கு வெங்கட் பிரபு டிரெய்லருக்காக மிகவும் மெனக்கிட்டிருக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் , சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், மோகன் போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கும் திரைப்படம் தான் கோட். இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக மோகன் மிரட்டியிருக்கிறார். 80களில் ஒரு கனவு நாயகனாக பார்த்த மோகனை கோட் படத்தில் அதுவும் விஜய்க்கு வில்லனாக பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: தளபதியோட வம்புக்கே நிக்கிறீங்களே தலைவா… செப்டம்பரில் இப்படி ஒரு ஸ்கெட்ச்சா?

பிரசாந்த் , பிரபுதேவா மற்றும் அஜ்மல் விஜய்க்கு நண்பர்கள் கேரக்டரில் நடித்திருக்கின்றனர். ஒரு ஸ்பை ஆக்‌ஷன் கலந்த படமாக கோட் திரைப்படம் தயாராகியிருக்கின்றது. இதில் இன்னும் சொல்லப்படாத பல கேரக்டர்கள் இருப்பதாகவும் தெரிகிறது.

ஏற்கனவே விஜயகாந்தை ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கோட் படத்தில் காட்ட இருக்கிறார்கள். திரிஷா ஒரு பாடலுக்கு ஆட இருப்பதாகவும் தெரிகிறது. சிவகார்த்திகேயனும் இந்தப் படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் வருகிறார் என்றும் பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இதையும் படிங்க: அஜித் வீட்டில் வரலட்சுமி விரதம்!.. ஷாலினி எப்படி இருக்காங்க பாருங்க!..

இந்த நிலையில் பிரபல மூத்த நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் தான் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் போன்றவர்களை வழி நடத்தும் ஒரு ஆலோசகராக நடித்திருக்கிறாராம். இதை பற்றி வெங்கட் பிரபு ஒய்ஜியிடம் ‘ நீங்கள் அவர்களுக்கு ஒரு guide ஆக இருந்து வழி நடத்தும் கேரக்டரில் நடிக்க வேண்டும். கொஞ்ச நேர காட்சிதான். ஆனால் நீங்கள் நடித்தால்தான் நன்றாக இருக்கும்’ என கூறினாராம்.

yg
yg

இதையும் தாண்டி வெங்கட் பிரபுவின் மாநாடு படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவின் எல்லா படங்களிலும் நான் இருப்பேன். அந்தளவுக்கு என்னுடைய ஆக்டிங் ஸ்டைல் வெங்கட் பிரபுவுக்கு மிகவும் பிடிக்கும் என ஒய்ஜி கூறினார்.

இதையும் படிங்க: 350 கோடி பட்ஜெட்டு!. பாத்து பண்ணுயா!.. கங்குவாவை புலம்பவிட்ட வேட்டையன்!…

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.