Connect with us
lokesh

Cinema News

கமலுடன் மீண்டும் இணையும் லோகேஷ் கனகராஜ்!. அட டைட்டிலே மாஸா இருக்கே!…

Lokesh kanagaraj: மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு முன் இவர் யாரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை. சில குறும்படங்களை மட்டும் இயக்கினார். முதல் திரைப்படமே பாராட்டுக்களை பெற்றது.

அதன்பின் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். கதாநாயகி இல்லாமல், டூயட் பாடல் இல்லாமல் கார்த்தி நடித்த முதல்; திரைப்படம் இது. படம் முழுக்க பக்கா ஆக்‌ஷன் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையை கொண்டிருந்தது. மாநகரம் போலவே ஒரு இரவில் நடக்கும் கதை இது.

இதையும் படிங்க: சூர்யாவின் பான் இண்டியா ஹீரோ கனவுக்கு ஆப்பு!.. வேட்டையன் மூலம் ஸ்கெட்ச் வைக்கும் ரஜினி…

அந்த படங்களுக்கு பின் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தை இயக்கினார் லோகேஷ். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். கொரொனா காலத்தில் பல மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த நிலையில் மாஸ்டர் படம் ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு வரவழைத்தது.

அதன்பின் கமலை வைத்து லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. கமல் நடிப்பில் வெளியான படங்களிலேயே விக்ரம் திரைப்படம் அதிக வசூலை பெற்ற படமாக அமைந்தது. இன்னும் சொல்லப்போனால் இந்த படம்தான் கமலை மீண்டும் ஒரு பிஸியான நடிகராக மாற்றியிருக்கிறது.

lokesh

விக்ரம் படத்திற்கு பின் மீண்டும் விஜயை வைத்து லியோ படத்தை இயக்கினார் லோகேஷ். தமிழ் சினிமாவிலேயே இந்த படத்திற்கு இருந்தது போல வேறு எந்த படத்திற்கும் எதிர்ப்பார்ப்பு இருந்தது இல்லை என்றே சொல்லலாம். அப்படி வெளியான லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ். இந்த படம் முடிந்த பின் கைதி 2 எடுக்கவிருக்கிறார். அதன்பின் மீண்டும் கமலை வைத்து விக்ரம் படத்தின் அடுத்த படத்தை எடுக்கவிருக்கிறார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. இந்த படத்திற்கு விக்ரம் ரிட்டன்ஸ் என்கிற தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறாராம் லோகேஷ்.

இதையும் படிங்க: அப்படிப்போடு… பிரசாந்துக்கு பொண்ணு ரெடி.. திருமண தேதி எப்போ தெரியுமா?

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top