Cinema News
உடம்பு இப்படி போனதுக்கு காரணம் நான் பண்ண அந்த தப்பு! இப்படியா செய்வீங்க கீர்த்தி?
Keerthy Suresh: தென்னிந்திய சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்ற திரைப்படமாக ரகு தாத்தா திரைப்படம் அமைந்தது. முழுக்க முழுக்க கீர்த்தி சுரேஷை மையமாக வைத்து தான் இந்த படம் படமாக்கப்பட்டது.
ஒரு காமெடி கலந்த ஜானரில் இந்த படம் உருவானது .அதுவும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி இந்த படம் வெளியாகி இருந்தது. பொதுவாக கீர்த்தி சுரேஷை பொருத்தவரைக்கும் சமீப காலமாக கதைக்கு அவருடைய கதாபாத்திரம் எந்த அளவு முக்கியத்துவம் பெறுகிறது என்ற வகையில் தான் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: இது சாதாரண ஸ்குவாடு இல்ல.. போட்டோ போட்டு கெத்து காட்டிய ‘விடாமுயற்சி’ டீம்
அந்த வகையிலும் ரகு தாத்தா திரைப்படம் அமைந்தது. இப்படி இந்த சிறு வயதில் இவருடைய கதை தேர்ந்தெடுக்கும் விதம் திரைப்பிரபலங்கள் மத்தியிலும் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி போன்ற பிறமொழி சினிமாக்களிலும் கீர்த்தி சுரேஷ் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழில் விஜய் சமந்தா நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட் கொடுத்த படம் தெறி. அதனுடைய ஹிந்தி ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் தான் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக வருண் தவான் நடித்து வருகிறார். இது கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முதல் ஹிந்தி திரைப்படம் ஆகும் . ஆரம்பத்தில் ஒரு பப்லியான முகத்தோற்றத்துடன் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் வலம் வந்த கீர்த்தி சுரேஷ் மகாநடி படத்திற்கு பிறகு அவருடைய தோற்றத்தில் பெரிய அளவில் வித்தியாசம் ஏற்பட்டது .
இதையும் படிங்க:சினிமாவில் பானுப்பிரியா நடிக்காதது இதுக்குத்தானா? அவருக்கு சரியான ஜோடி அந்த ஹீரோவாம்..!
அதாவது பார்க்கவே உடல் மெலிந்து கழுத்து நீண்டு போய் இது கீர்த்தி சுரேஷா என்ற அளவுக்கு அனைவரையும் சந்தேகிக்க வைத்தது. ஏன் இந்த அளவு கீர்த்தி சுரேஷ் தன் உடல் நிலையை குறைத்தார் என்ற ஒரு கேள்வியும் அவரிடம் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் கீர்த்தி சுரேஷ் ஏன் அந்த அளவுக்கு உடல் மெலிந்து போனேன் என்பதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.
மகாநடி படத்திற்கு பிறகு உடம்பை குறைக்கலாம் என்ற எண்ணத்தில் கார்டியோ உடற்பயிற்சி மட்டும் செய்து வந்தாராம் கீர்த்தி சுரேஷ். அதாவது கார்டியோ உடற்பயிற்சி என்றால் ஓடுவது, வேகமாக நடப்பது, குதிப்பது, நீச்சல் செய்வது போன்ற பயிற்சிகளை மட்டுமே செய்து வந்தாராம். அதனுடன் சேர்ந்து வலிமை பயிற்சி சம்பந்தப்பட்ட உடற்பயிற்சிகள் எதுவும் செய்யவில்லையாம் .
இதையும் படிங்க:அப்பவே சிவாஜி படத்துல ரெண்டு கிளைமேக்ஸ்!.. அது மட்டும் வந்திருந்தா செம ஹிட்டு!..
இந்த இரண்டும் சேர்ந்து செய்தால்தான் எந்த ஒரு வித்தியாசமும் தெரியாமல் நம் உடல் எடை ஒரு சீராக இருக்கும் என கூறினார் கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு தான் அவருக்கு தான் செய்த தவறு என்ன என்பது புரிந்ததாம். பின் கொரோனா காலத்தில் யோகா செய்யலாம் என ஒரு இரண்டு வருடங்கள் யோகாவில் முழு கவனம் செலுத்தினாராம் கீர்த்தி சுரேஷ்.
அதனுடன் சேர்ந்து வெயிட் லிப்டிங் புஷ் அப் பவர் லிப்டிங் ஸ்குவாட் போன்ற வலிமை சம்பந்தமான பயிற்சிகளும் சேர்ந்து செய்தாராம் கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு தான் முகமும் பொலிவடைந்து பார்க்கவும் நன்றாக தெரிய ஆரம்பித்தேன் என கூறினார் கீர்த்தி சுரேஷ்.