Connect with us

Cinema News

எலே இது வேட்டையன் இல்ல அடுத்த தர்பாராம்.. லீக்கான வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்

Vettaiyan: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தின் பாடல் காட்சி ஒன்று இணையத்தில் கசிந்திருக்கும் நிலையில் அதை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

பல வருடங்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை ஜெயிலர் திரைப்படம் பெற்றது. இப்படத்தின் வசூல் 500 கோடியை தாண்டியது. இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து உருவாகும் திரைப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்தது.

இதையும் படிங்க: விஜய் என்னிடம் நாலுமுறை அப்படி பண்ணார்… சங்கீதா கிரிஷை சங்கடப்படுத்திய சம்பவம்…

தொடர்ச்சியாக, லைக்கா நிறுவனம் தயாரிப்பில் டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படம் வேட்டை என அறிவிப்பு வெளியானது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மஞ்சு வாரியர், ராணா, பகத் பாசில், துஷாரா விஜயன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படம் காவல் அதிகாரியின் வாழ்க்கையில் நடக்கும் என்கவுண்டர் சம்பந்தப்பட்டதாக அமைக்கப்பட்டு இருக்கும் எனவும் தகவல்கள் தெரிகிறது. ஜனவரி தொடங்கப்பட்ட இப்படத்தின் சூட்டிங் முழுவதும் முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

#image_title

இப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் இசையமைப்பாளர் அனிருத் கேமியோ ரோலில் நடித்திருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் பாடலின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்து இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் இது அதுல என்ற ரீதியிலும், தர்பார் படம் போல இருப்பதாகவும் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: முதல் ஆளா சிம்புவா? நம்பிக்கை அதானே எல்லாம்.. கமலால் நடந்த அதிசயம்..

மனசிலாயோ வீடியோ: https://x.com/starboy___18/status/1825803132166610971
author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top