போட்றா வெடிய!.. ரஜினிக்காக பாடும் சிம்பு… இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!..

Published on: August 21, 2024
str rajni
---Advertisement---

சிம்பு நடிகராக மட்டுமல்லாமல் இயக்கனர், பாடலாசிரியர்னு பல திறன்களைக் கொண்டவர். குழந்தை நட்சத்திரமாக இருந்து இன்று வரை தொடர்ந்து சினிமா உலகில் நடித்து வருவதால் அவருக்கு சினிமா சார்ந்த அத்தனை விஷயங்களும் தெரியுமாம்.

காதல் அழிவதில்லை படத்தில் ஹீரோவாக அறிமுகமானாலும் அதன்பிறகு பல வித சர்ச்சைகளில் சிக்கி வந்தார். ஆனாலும் அத்தனையையும் தனது இடைவிடாத முயற்சியால் முறியடித்து தற்போது வெற்றிப்பாதையை நோக்கி முன்னேறிக் கொண்டு இருப்பது இவரது தனிச்சிறப்பு.

விரல் வித்தைக் காரர் என்று ஆரம்பத்தில் கிண்டல் செய்தவர்களுக்கு மன்மதன் படத்தின் மூலம் பதிலடி கொடுத்தார். படத்தில் நடித்து இயக்கி அசத்தினார். இப்படி ஒரு அபார நடிப்பை யாரும் பார்த்திருக்கவே மாட்டார்கள்.

ஒரே படத்தில் முற்றிலும் மாறுபட்ட இருவேறு கெட்டப்புகள். எல்லா நடிகர்களையுமே திரும்பிப் பார்க்க வைத்தார். அதன்பிறகு சிம்புவிற்கு காதல் விவகாரங்களால் மன உளைச்சல் ஏற்பட்டது. அதனால் தனது படங்களில் சரிவர கவனம் செலுத்த முடியாமல் போனது.

str5
str5

மேலும் அவர் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வருவதில்லை என்றும் சொல்லப்பட்டது. அவரது படங்களும் தொடர் தோல்வியைத் தழுவின. சிம்பு இனி அவ்வளவு தான் என்று நினைத்தவர்களுக்கு மாநாடு படத்தின் மூலம் பதிலடி கொடுத்தார். படத்தில் அவரது நடிப்பை ரசிக்காதவர்களே இல்லை. தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களை ரசிக்கும்படி கொடுத்தார்.

அடுத்து கமலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மணிரத்னம் இயக்கத்தில் தற்போது மிரட்டலாகத் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன், கூலின்னு பரபரப்பாக இயங்கி வருகிறார்.

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தான் சிம்பு ஒரு பாடலைப் பாட இருக்கிறாராம். அதுவும் ஓபனிங் சாங்காக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. கலக்குவேன் கலக்குவேன்னு மீண்டும் கலக்கப் போறாராம் சிம்பு.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.