Prasanth: தமிழ் சினிமாவின் 90களில் பிரபல நடிகராக இருந்தவர் பிரசாந்த். ஆனால் அவரால் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் பின் தங்கி விட்டார். முன்னணியில் இருந்த பிரசாந்த் அஜித்திடம் மிகப்பெரிய இரண்டு படங்களை கைவிட்ட நிகழ்வு குறித்து அவர் தந்தை தியாகராஜன் தெரிவித்திருப்பது வைரல் ஆகி வருகிறது.
தன்னுடைய 17 வயதில் வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகராக கால் பதித்தவர் பிரசாந்த். சாதாரணமாக அல்லாமல் எல்லா விதங்களிலும் தன்னை மெருகேற்றிய பின்னரே நடிக்க வந்தார். 90களில் கோலிவுட்டில் முன்னணி நடிகராக ரசிகர்களிடம் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றிருந்தார்.
இதையும் படிங்க: தளபதி சும்மா போகலை… கொடுத்த ஆர்டர் அப்படி.. அண்ணன் மேல பாசமெல்லாம் இல்லையோ…
கோலிவுட்ல இவருக்கு பின்னால் கால் பதித்தவர்கள் விஜய் மற்றும் அஜித். ஆனால் அவர்கள் தற்போது அசைக்க முடியாத உயரத்தில் இருக்கின்றனர். பிரசாந்த் யோசிக்காமல் செய்த சின்ன சின்ன தவறுகளால் அவருடைய பிரபலம் ஆட்டம் கண்டது. அதைத் தொடர்ந்து அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் மொத்த கேரியரையுமே அசைத்துப் பார்த்தது.
இந்த சறுக்கலில் அவர் தவறவிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் முக்கியமானது ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இப்படத்தில் முதலில் அஜித் வேடத்தில் நடிக்க பிரசாந்தை தான் படக்குழு அனுப்பியது.

ஆனால் அவர் தந்தை தியாகராஜன் வயதானவராக தோன்றும் தபுவுடன் பிரசாந்தால் நடிக்க முடியாது. இதனால் ஐஸ்வர்யா ராய் அவருக்கு ஜோடியாக கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார். ஆனால் ஜோடியை மாற்ற விரும்பாத ராஜூவ்மேனன் பிரசாந்தை அப்படத்தில் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆத்தாடி… இத்தனை மாசமா? கூலிக்காக ரஜினியையே இப்படியா படுத்துவீங்க லோகேஷ்..












