Cinema News
அஜித்துக்கு பிடிச்ச பழமொழி இதுதானாம்! அதான் மனுஷன் இப்படி இருக்காரு
Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவரும் அஜித் அதற்கடுத்தபடியாக குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தை பொருத்தவரைக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் இருப்பதாக தெரிகிறது.
இன்னும் ஓரிரு தினங்களில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் அஜித். தமிழ் சினிமாவில் அஜித்துக்கு என ஒரு தனி இடம் அப்போதிலிருந்து இப்போது வரை இருக்கத்தான் செய்கிறது. எந்த ஒரு ரசிகர் மன்றமும் இல்லாமல் தன் படங்களின் மூலமாகவே லட்சக்கணக்கான ரசிகர்களை தன்னுள் வைத்திருக்கிறார் அஜித்.
இதையும் படிங்க: பிரச்சினையே இதுதான்.. கோட் படம் மீண்டு வருமா? எல்லாம் அவர் கைல இருக்கு
நடிகர்களிலேயே அஜித் மிகவும் வித்தியாசமானவராக தெரிகிறார் என்பதுதான் பல பேரின் கருத்தாக பார்க்கப்படுகிறது. ரசிகர்களை சந்திப்பது கிடையாது. பொது இடங்களுக்கு வருவதும் கிடையாது. எந்த ஒரு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் கிடையாது.
இப்படி இருக்கும் அஜித்துக்கு எப்படி இந்த அளவு ரசிகர்கள் உருவானார்கள் என்பதுதான் இதுவரை அனைவரின் சந்தேகமாக பார்க்கப்படுகிறது. அதிலும் ரஜினி கமல் இவர்களுக்கு இணையான ஒரு புகழை உடையவராக நடிகர் அஜித் இருந்து வருகிறார். அவருடைய இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தன்னுடைய படங்களின் மூலமாகவே மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார் அஜித்.
இதையும் படிங்க: கமலுக்கு மட்டும்தான் புரியும் போல!.. கொட்டுக்காளியை இப்படி பாராட்டிட்டாரே!…
இந்த நிலையில் அவருடைய ஒரு பழைய பேட்டி ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. அதாவது அன்பு என்றால் என்ன என்பதற்கான ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறார் அஜித். உங்களிடம் அன்பாக இருப்பவர்களுடன் மட்டுமே உண்மையை பேசுங்கள். அந்த அன்பு அற்புதமாக இருக்கும். அந்த அளவுக்கு நீ ரொம்ப நல்லவனா என்று கூட நம்மை யோசிக்க வைக்கும்.
ஒரு மரியாதை ஏற்படும். அன்புக்கு எப்பவுமே பொய் சொல்ல தெரியாது. அந்த எதிர்பார்ப்பு இல்லாத அன்பை அள்ளி கொடுக்கிறவங்க பெண்கள்தான். வீட்டில் நுழைந்ததுமே அம்மானு தான் கூப்பிட தோணும். ‘வீட்டை கட்டுறவன் ஆண். அதை இல்லமா உருவாக்குகிறவள் பெண்’ என்ற பழமொழி எனக்கு ரொம்ப பிடித்த பழமொழி என அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் அஜித்.