Thangalaan: அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். புறநகர் சென்னையில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை, அந்த பகுதியில் வசிக்கும் இளைஞரின் கல்லூரி வாழ்க்கை, காதல் என எல்லாவற்றையும் திரைக்கதையாக அமைத்திருந்தார். இந்த படம் ஹிட் அடித்தது.
அதன்பின் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கினார். இது வட சென்னையில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை, அவர்களின் வாழ்வில் இருக்கும் காதல், அரசியல் ஆகியவற்றை அழுத்தமாக காட்டி இருந்தார். குறிப்பாக வடசென்னை பகுதியில் இருக்கும் சுவர் அரசியலை அதிர்ச்சியாக காட்சிப்படுத்தி இருந்தார்.
இதையும் படிங்க: மீண்டும் மணிரத்னத்துடன் கை கோர்க்கும் கமல்!.. செம டிவிஸ்ட்டா இருக்கே!..
இந்த படமும் வெற்றி. அதன்பின் ரஜினியை வைத்து கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கினார். ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பை படத்தை இயக்கினார். இப்போது ரஞ்சித்தின் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியாகியுள்ள தங்கலான் படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாகவே ரஞ்சித் படங்கள் திரையில் ஒலிக்கிறது. இது அந்த சமூகத்தை சாராத ரசிகர்கள் பலருக்கும் பிடிப்பதில்லை. ரஞ்சித் படம் என்றாலே அது சாதி ரீதியிலான படம் என முத்திரை குத்திவிடுகிறார்கள். தங்கலான் படத்திற்கும் இதுபோன்ற முத்திரையையே பலரும் குத்துகிறார்கள்.

சில 100 வருடங்களுக்கு முன்பு வட ஆற்காடு பகுதியில் தங்க சுரங்கத்தில் வேலை செய்த மக்களின் வாழ்க்கை, வெள்ளைக்காரார்கள் அவர்களை எப்படி பயன்படுத்தினார்கள் என அற்புதமாக திரைக்கதை அமைத்து காட்டியிருக்கிறார் ரஞ்சித் என பலரும் பாராட்டுகிறார்கள். அதேபோல், விக்ரமின் நடிப்பும் பாராட்டை பெற்றிருக்கிறது.
இந்நிலையில், பா.ரஞ்சித் மீது பெண் வழக்கறிஞர் பொற்கொடி என்பவர் சென்னை கமிஷனர் அலுவகத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதில் ‘புத்த மதத்தை உயர்த்துவதற்காக வைணவ மதத்தை இழிவுபடுத்தி தங்கலான் படத்தில் காட்சிகளை வைத்திருக்கிறார் ரஞ்சித். அப்படிப்பட்ட சர்ச்சையான சாட்சிகளை நீக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: மீண்டும் மணிரத்னத்துடன் கை கோர்க்கும் கமல்!.. செம டிவிஸ்ட்டா இருக்கே!..
