Connect with us
parthiban

Cinema News

விஜயகாந்த் நடிக்க மறுத்த திரைப்படம்!.. இதுமட்டும் நடந்திருந்தா பார்த்திபனே இல்ல!..

Parthiban: சினிமாவில் ஒரு நடிகர் பிரபலமாவது மட்டுமே நமக்கு தெரியும். ஆனால், அதற்கு பின்னால் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என அவருக்கு மட்டுமே தெரியும். பெரும்பாலான நடிகர்கள் அதை வெளியே சொல்லமாட்டார்கள். சிலர் மட்டும் பேட்டி கொடுக்கும்போது சொல்லிவிடுவார்கள்.

அதேபோல், ஒரு கதை உருவாகி அதை திரைப்படமாக வெளிவந்து அதன் மூலம் ஒரு புதுமுக நடிகர் ரசிகர்களிடம் பிரபலமாகி அதன்பின் அவர் பல படங்களில் நடிப்பதை பார்க்க முடியும். இதற்கு உதாரணமாக பலரையும் சொல்ல முடியும். பாக்கியராஜ் எல்லாம் அப்படி வந்த ஒருவர்தான்.

இதையும் படிங்க: தங்கலான் படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டும்!.. இந்தா வந்துட்டாங்கல்ல!…

அவரின் உதவியாளரான பார்த்திபன் புதிய பாதை என்கிற படத்தை இயக்கி அவரே நடித்தார். அந்த படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து இயக்குனர், நடிகர் என கடந்த 35 வருடங்களாக திரையுலகில் கலக்கி வருகிறார். ஆனால், புதிய பாதை எடுப்பதற்கு அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது பலருக்கும் தெரியாது.

புதிய பாதை கதையை எழுதி ரஜினி, கமல் உள்ளிட்ட பல ஹீரோக்களிடமும் போய் சொன்னார் பார்த்திபன். ஆனால், யாரும் பார்த்திபனை நம்பவில்லை. இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ‘பார்த்திபன் புதிய பாதை கதையை என்னிடம் சொன்னார். எனக்கு பிடித்திருந்தது. விஜயகாந்திடம் அந்த கதையை சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. ஆனால், பார்த்திபனை இயக்குனராக ஏற்க அவர் விரும்பவில்லை.

‘கதை, வசனம் மட்டும் அவர் எழுதட்டும்.. வேறு ஒரு இயக்கனரை போட்டு படம் எடுப்போம்’ என சொன்னார். எனக்கு அதில் விருப்பமில்லை. எனவே, பார்த்திபனிடம் இதை சொல்லி ‘கொஞ்சம் பொறுத்திரு’ என்றேன். அதன்பின் ஒரு தயாரிப்பாளரை பிடித்து இந்த கதையை ‘கேள்விக்குறி’ என்கிற தலைப்பில் படமாக எடுக்க முயற்சி செய்தார்.

பூஜையெல்லாம் போட்டார். ஆனால், செய்திதாளில் விளம்பரம் கொடுக்க தயாரிப்பாளர் காசு இல்லை என சொல்லிவிட்டதாக என்னிடம் வந்து சொன்னார். 10,500 கொடுத்து பேப்பரில் ஒரு முழுபக்கத்தில் விளம்பரம் குடுக்க வைத்தேன். ஆனால், கேள்விக்குறி டேக் ஆப் ஆகவில்லை. அதன்பின்னர்தான் அந்த கதைக்கு புதிய பாதை என தலைப்பு வைத்து படம் எடுத்தார். அது ஹிட் ஆனது.

அதன்பின் அவரை வைத்து தையல்காரன் என்கிற படத்தை தயாரித்தேன். அவர் கதை, வசனம் எழுதி நடிக்க எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்’ என தாணு சொல்லியிருந்தார்.

இதையும் படிங்க: நல்ல வேளை கல்யாணம் பண்ணல! பப்லுவை பற்றி மனம் திறந்த முன்னாள் காதலி

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top