Connect with us
shoba

Cinema News

இத விட ஒரு கிஃப்ட் எதுவும் இல்ல! தாய் ஷோபாவிடம் இருந்து விஜய்க்கு பறந்த செய்தி

Vijay: இன்று விஜய் தன்னுடைய பனையூர் அலுவலகத்தில் தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தி கட்சியை கொள்கை பாடலையும் வெளியிட்டு தனது தொண்டர்களுக்கு ஒரு பெரிய விருந்தே வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்த விஜய் தொடர்ந்து மக்கள் நலனுக்காகவும் மக்களுக்காகவும் பல செயல்களை செய்து வருகிறார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை நேரடியாக எதிர் கொள்ள இருக்கும் விஜய் அதற்கு முன்னதாகவே ஆயத்தப் பணிகளை செய்து கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: முத்து-மீனா பிரச்னை முடிஞ்சிது… அரசுவேலைக்கு தயாராகும் செந்தில்.. எழில் பிறந்தநாளுக்கு வருவாரா?

இன்று தனது கட்சி கொடியை அறிமுகம் படுத்திய விஜய் தொண்டர்கள் மத்தியில் சில நிமிடம் உரையாற்றினார்.  சிவப்பு மஞ்சள் நிற கலரில் அந்த கொடி இருக்க அதன் நடுவே வாகை மலரும் அதன் இருபுறமும் போர் யானைகளும் இருப்பது வெற்றியை குறிக்கோளாக கொண்டது நமது கட்சி என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.

மேலும் இந்த கட்சிக்கொடியின் விளக்கத்தை மாநாடு அன்று தெரிவிக்கிறேன் என்றும் நமது கட்சி கொள்கைகள் என்ன என்பதை பற்றியும் மாநாடு அன்றே கூறுகிறேன் எனவும் கூறி இருக்கிறார் விஜய். இந்த நிலையில் விஜய்க்கு அவருடைய தாய் ஷோபாவிடம் இருந்து ஒரு வாழ்த்து செய்தி சென்றிருக்கிறது.

இதையும் படிங்க: விஜய்க்கு பிடித்த எண் இதுதானாம்! கூட்டிக் கழிச்சு பாருங்க.. சரியா வரும்

ஒரு அம்மாவாக விஜய்க்கு அன்பான வார்த்தைகளை கூறி அவருடைய ஆசிகளையும் அனுப்பி இருக்கிறார் தாய் சோபா. அதில் அவர் கூறியதாவது  ‘இப்போது போல எப்போதும் உண்மையா இரு விஜய்.நாட்டுக்கே ராஜானாலும் எனக்கு பிள்ளை. தமிழ் மொழியின் பாரம்பரியம் போற்று.

பெண்ணியம் காப்பாற்று. புரட்சிகர திட்டங்கள் தீட்டு. வானில் பறக்கும் உன் கொடி. உன் அரசியல் வெற்றிக்கு இதுவே முதல் படி. ஏற்கனவே நான் ஒரு CM (celebrity mother). இனி நானும் ஒரு PM (proud mother)’ என கூறி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். இதிலிருந்து ஷோபா எந்த அளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பது நமக்கு தெரிகிறது.

இதையும் படிங்க: தங்கலான் வெற்றி வெற்றின்னு சொல்லி யாரை ஏமாத்துற… பயில்வான் காட்டம்

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top